பக்கம் எண் :

392

     

பெரும - பெருமானே; எம் விழவுடைநாட்டுச் சேன்மோ என - எம்முடைய
விழாப் பொருந்திய நாட்டிற்குச் செல்ல வேண்டினேம் விடையருளுக என்று;
யாம் தன் அறியுநமாக - யாங்கள் அவனுக்கு அறிவித்தேமாக; தான் பெரிய
அன்புடைமையின் - அவன் தான் மிக்க அன்புடையனாதலால்; எம் பிரிவு
அஞ்சி - எம்மைப் பிரிதற்கு அஞ்சி; துணரியது கொளாவாகிப் பழமூழ்த்து -
குலை குலையாகப் பூத்துள்ளதாயினும் எவ்வுயிர்களாலும் கொள்ளப் படாவாய்ப்
பழுத்துக் கனிந்து; பயம் பகர்வறியா - பயன்படுதற்கியலாதவாறு; மயங்கரில்
முதுபாழ்ப் பெயல்பெய்தன்ன - முட்கள் கலந்த கொடிகள் பின்னிக்கிடக்கும்
புதரிடையே நின்று வற்றும் முதிய பாழிடத்தின்கண் மழைபெய்தாற் போன்ற;
செல்வத் தாங்கண் - செல்வமிக்க இடத்தையுடைய; ஈயா மன்னர் புறங்கடைத்
தோன்றி - இரவலர்க்கு ஈயாத வேந்தர் முற்றத்தில் நின்று; சிதாஅர் வள்பின்
சிதர்ப்புறத் தடாரி - துண்டித்த வார்களாற் கட்டப்பட்ட சிதர்ந்த
புறத்தையுடைய தடாரிப்பறையை; ஊன் சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி -
ஊனால் தெற்றப்பட்ட தெளிந்த கண்ணிடத்தே யறைந்து; விரல்விசை
தவிர்க்கும் அரலையில் பாணியின் - விரலால் நொடிக்கும் நொடி விசையின்
மேம்பட்ட குற்றமில்லாத தாளத்தோடு கூடிய பாட்டால்; இலம்பாடகற்றல்
யாவது - வறுமையைப் போக்குவது கூடாதாம்; புலம்பொடு - ஆதரவற்ற
தனிமைத் துயரத்துடனேஇ தெருமரம் உயக்கமும் தீர்க்குவெம் -
வள்ளியோரைச் சூழ்ந்து திரியும் வருத்தத்தையும் யாம் போக்குவோம்;
அதனால்-; இரு நிலம் கூலம் பாற - பெரிய இந்நிலவுலகம் கூலமின்றிக்
கெடுமாறு நின்ற; கோடை - வேனில் வெம்மை மிக்க வறற்காலம்; வருமழை
முழக்கிசைக்கு ஓடியபின்றை - வருகின்ற மழை முகிலினது முழக்கிசையுடன்
பெய்து நீங்கியபின்பு; சேயைாயினும் - நெடுந்தொலைவிலுள்ள நாட்டில்
இருப்பினும், இவணையாயினும் - இந்த நாட்டிடத்தே யிருந்தாயாயினும்;
இதற்கொண்டு அறிநை - இது கொண்டு நினைவாயாக; கிணைவு -
கிணைவனே; வாழி - வாழ்வாயாக; சிறுநனி ஒருவழிப் படர்க - ஒருவழியே
சிறிது பெரிது நினைந்து ஒழுகுவாயாக; என்றோன் - என்று சொன்னான்;
எந்தை - எங்கள் தலைவன்; ஒலி வெள்ளருவி வேங்கடநாடன் - ஒலிக்கின்ற
வெள்ளிய அருவி பொருந்திய வேங்கடநாட்டுக் குறியவன்; உறுவரும்
சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் - அறத்துறை அம்பியின் மான பெரியவராயினும்
சிறியவராயினும் வருவோரை இருகரையினும் மாறிமாறிக் கொண்டுபோய்விடும்
நீர்த்துறையிடத்துள்ள அறத்துக்குழைக்கும் தெப்பம் போல; மறப்பின்று -
மறவாமல்; இருங்கோள்