பக்கம் எண் :

391

     
 ஊனு மூணு முனையி னினிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுந் தாற்றி யிருந்தனெ மாகச்
 5.சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென
 யாந்தன் னறிந மாகத் தான்பெரி
தன்புடை மையி னெம்பிரி வஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப்
பயம்பகர வறியா மயங்கரின் முதுபாழ்ப்
 10.பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண்
 ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி
விரல்விசை தவிர்க்கும் மரலையில் பாணியின்
 15.இலம்பா டகற்றல் யாவது புலம்பொடு
 தெருமர லுயக்கமுந் தீர்க்குவெ மதனால்
இருநிலங் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச்
சேயை யாயினும் மிவணை யாயினும்
 20. இதற்கொண்டறிநை வாழியோ கிணைவ
 சிறுநனி, ஒருவழிப் படர்கென் றோனே யெந்தை
ஒலிவெள் ளருவி வேங்கட நாடன்
உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும்
அறத்துறை யம்பியின் மான மறப்பின்
 25.றிருங்கோ ளீராப் பூட்கைக்
 கரும்ப னூரன் காதன் மகனே.

     திணையுந் துறையுமவை. கரும்பனூர்கிழானைப்புறத்திணை நன்னாகனார்
பாடியது.


     உரை: ஊனும் ஊணும் முனையின் - இறைச்சியும் சோறு
மாகியவற்றைத் தெவிட்டி வெறுத்தால்; பாலிற்பெய்தவும் பாகிற்கொண்டவும்
- பால் கலந்து செய்தனவும் வெல்லப் பாகு கொண்டு செய்தனவுமாகிய
பண்ணியங்களை; இனிதென அளவுபு கலந்து - இது மிக வினி
தென்னுமாறு நன்கு கலந்து;மெல்லிது பருகி - மென்மையுண்டாகக் கரைத்துக்
குடித்துண்டு; விருந்து உறுத்து விருந்தாகி; ஆற்றி இருந்தெனமாக -
பசிபோக்கிப் பன்னாள் இனிதிருந்தேமாக;