பக்கம் எண் :

399

     

வருந்தேன்” என்ற கருத்தமைந்த இப் பாட்டைக் கிணைப்பொருநன் ஒருவன்
கூற்றில் வைத்துப் பாடியுள்ளார். இப் பாட்டின் இடையே சில அடிகள்
சிதைந்துவிட்டன.

 ஒண்பொறிச் சேவ லெடுப்பவேற் றெழுந்து
தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோற் சிறுகிணை சிலம்ப வொற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
 5. தன்புக ழேத்தினெ னாக வென்வலத்
 திடுக்க ணிரியல் போல வூன்புலந்
தருங்கடி வியனகர்க் குறுகல் வேண்டிக்
கூம்புவிடு மென்பிணி யவிழ்த்த வாம்பற்
றேம்பா யுள்ள தங்கமழ் மடருணப்
 10.பாம்புரி யன்ன வடிவின காம்பின்
 கழைபடு சொலியி னிழையணி வாரா
ஒண்பூங் கலிங்க முடீஇ நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பி னவ்வாங் குந்திக்
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
 15.மெல்லணைக் கிடந்தோன்...................
 வெறபெயர்ந்த...................நோக்கி.................
...................யதற்கொண்
டழித்துப் பிறந்தனெ னாகி யவ்வழிப்
பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பறி யேனே
 20.குறுமுலைக் கலமரும் பாலார் வெண்மறி
 நரைமுக வூகமொ டுகளும் வரையமல்...
...................குன்றுபல கெழீஇய
கான்கெழு நாடன் கடுந்தே ரவியனென
ஒருவனை யுடையேன் மன்னே
 25.அறானெவன் பரிகோ வெள்ளியது நிலையே.

     திணையுந்துறையுமவை...மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

     உரை: ஒண்பொறிச் சேவல் எடுப்ப - ஒள்ளிய பொறிகளையுடைய
சேவற்கோழி கூவித் துயிலெடுப்ப; ஏற்றெழுந்து - படுக்கையினின் றெழுந்து
போந்த; தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர் - தண்ணிய பனிதுளிக்கும்
புலராத விடியற்காலத்தே; நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி - நுண்ணிய
கோல் கட்டப்பட்ட தடாரிப் பறையைக் கொட்டி; நெடுங்கடை நின்று - நெடிய
மனை முற்றத்திலே நின்று; பகடுபல வாழ்த்தி - பலவாகிய உழவெருதுகளை
வாழ்த்தி; தன்புகழ் ஏத்தினெனாக - அவற்றை யுடையனான அவியன்
புகழ்களைச் சொல்லிப் பாராட்டிப் பாடினேனாக; ஊன் புலந்து என்வலத்
திடுக்கண் இரியல் போக - உடல் மெலிவித்து என்பால் தங்கியிருந்த