பக்கம் எண் :

398

     

383. மாறோக்கத்து நப்பசலையார்

     மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்த பகுதியாகும். இஃது
இடைக்காலத்துக் குட நாட்டையும் முள்ளிநாட்டையும் தன்கண்
கொண்டிருந்தது. இப் பகுதியிலுள்ள மாறமங்கலத்தை நற்குடி வேளாளர்
வராலறென்னும் தமிழ்நூல் (அகத். 38) ஓகமாநக ரென்று குறிக்கிறது.
மாறமங்கலமாகிய ஓகமாநகர்ப் பகுதி குட நாட்டுப் பகுதி; மாறோக்கத்து
முள்ளிநாட்டில் கல்லிடைக்குறிச்சியும் சேரன்மாதேவியும் இருந்தன எனக்
கைந்நிலையென்னும் நூற்குறிப்பால் அறிகின்றோம். இப்பகுதிக்குரியராகிய
ஆசிரியர் நப்பசலையாரென்னும் புலவர்பெருமாட்டியார், இப்பாட்டின் கண்
அவியன் என்னும் குறுநில மன்னனொருவனைக் குறித்துப் பாடியுள்ளார்.

     அவியன் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்தவன். அவன் பெயரால்
அவியனூரென்றோர் ஊர் பண்டைநாளில் இருந்தது. அஃது அவியனூர்
நாட்டுக்குத்தலைநகராகவும் இருந்ததெனத் திருவதிகைக்கல்வெட்டொன்று (A.
R. No. 419 of 1921) கூறுகிறது. இந்த அவியன் வழி வந்த வேந்தர்
இடைக்காலத்தே வேற்றுப் புல வேந்தர் வரவால் வலியழிந்து பலநூற்றாண்டு
காறும் அரசியலுலகில் தலைமறைவாக இருந்து வந்தனர். பதின்மூன்று,
பதினான்காம் நூற்றாண்டுகாறும் அவ்வப் போது தோன்றிய வேந்தருடைய
தானைத் தலைவராகவும், தானை மறவராகவும் இருந்துவந்து போதிய
வலிபெற்றவுடனே குறுநில மன்னராய் விளங்கலாயினர். இவர்கள் பாண்டி
நாட்டுத் திருப்பத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த சூரைக்குடி யென்னுமூரைத்
தலைநகராகக் கொண்டு பிற்காலத்தே விளக்கமுற்றிருந்தனர். அவருள்
சிலர் விசயாலயதேவரென்றும் மாளவ சக்கரவர்த்தியென்றும் தம்மைக்
கூறிக்கொள்வாராயினர். ஆயினும் பழைய தம் குடி முதல்வனான அவியன்
பெயரையும் மறவாறு பேணிவந்தனர். சடாவர்மன் வீரபாண்யன் காலத்தில்
அவியன் பெரியநாயனான விசயாலயதேவன் (A.R. No 119 of 1908)
என்பவனுடைய கல்வெட்டொன்று அவியன் மாளவ சக்கரவர்த்தி (A. R. No.
122 of 1908) என்பவன் கல்வெட்டொன்றும் திருப்பத்தூர் திருத்தளியாண்டார்
கோயிலில் உள்ளன.இந்த அவியர்கட்குக் குடி முதல்வனான அவியனைத்தான்
மாறோக்கத்து நப்பசலையார் “குன்று பலகெழீஇய கான்கெழுநாடன் கடுந்தேர்
அவியன்” என்றும், காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், களமலி
கள்ளின் நற்றே ரவியன்” (அகம். 271) என்றும் சிறப்பித்துள்ளனர். இந்த
அவியன்கைவண்மை      மிகவுடையன்;    புலவரை   யோம்பும் 
பெருந்தகைமையுடையவன். ஒரு கால் நப்பசலையார் வறுமையால்வாடி
அவனிருந்த ஊருக்குச் சென்றார். அவன், அவர் வருகையறிந்து தன்பாற்
போந்த தன்னைக் காணு முன்னே சிறந்த உணவும் உயர்ந்த ஆடையுந்தந்து
பின்பு தன்னை வந்து அவர் காணச்செய்து அவரது புலமை நலத்தை நுகர்ந்து
இன்புற்று அவர்க்குப் பெருஞ்சிறப்புச் செய்தான். நப்பசலையாரும் வறுமையின்
நீங்கி மறுபிறப்புக் கொண்டவரைப்போல் வேருவகை கொண்டார். பின்பு
அவன் அவருக்குப் பொருள் வேண்டும் போதெல்லாம் வேண்டிவாறு அளித்து
அவந்தான். அவனுடைய ஆதரவு பெற்று அனிதிருக்கையில் வெள்ளிமீன்
தென்புலம் சாய்ந்து நாட்டில் வறனுண்டாதற்குரிய குறிப்பைக் காட்டிற்று.
அதுகண்ட சான்றோர் வருந்தினாராக, நப்பசலையார், “யான் அவியன் என்ற
வள்ளியோனது ஆதரவு மிகவுடையேன்; அதனால் வெள்ளியின்
நிலைபிறழ்ச்சிக்குச் சிறிதும்