|       | சளனே,போய்ப் புலியைக்         கொல்க (அதம் ஹொய்சள) என வேந்தனைப்          பணித்தலும், அவன் உடைவாளையுருவிப் புலியைக் கொன்றான்: முனிவன்          அருள்பெற்று மீண்டசளவேந்தன் அதுமுதல் ஹொய்சளன் எனப்பட்டான்;          அவன் வழிவந்தோர் தம்மை ஹொய்சளர் எனக் கூறிக்கொள்வாராயினர்          எனமைசூர்நாட்டுப்பேலூர்மாவட்டத்துப் பேலவாடியில்         உள்ள          நரசிம்மஹொய்சளதேவர் கல்வெட்டொன்று (Ep Car. Vol.I.B1 : 171)                  கூறுகிறது. அந்நாட்டுஹொன்னாவரத்துக்கேசவப்பெருமாள்கோயில்                  கல்வெட்டு (lbid : Hn.65) இவ்வரலாற்றிற் கண்ட முயலைப்பற்றிய செய்தியை         நீக்கி எஞ்சியவற்றைக் கூறுகிறது.காட்டிலிருந்தமுனிவன்  மந்திர          வலிமையுடையனென்று சளன் என்பான் அறிந்து அவன் திருவடியில்          வீழ்ந்து வணங்கினனென்றும், அதனால் மகிழ்ச்சியுற்று, அவனுக்குச்          சசகபுரத்தைத் தலைமையாகக் கொண்ட பேரரசை வழங்க வேண்டுமென          விரும்பிய முனிவன் அதற்கேற்ற மந்திரச் செயல்களைச் செய்தானென்றும்,          அதனை அழித்தல் வேண்டிச் சசகபுரநகரத் தெய்வமாகிய வாசந்திகை          யென்பாள், ஒரு புலியுருக் கொண்டு வந்தாளென்றும், அதுகண்டு முனிவன்          அப் புலியைக் கொல்லுமாறு பணிப்பான் ஹொய்சள என்றானென்றும்,          அவன்அவ்வண்ணமேசெய்துஹொய்சளவேந்தனானானென்றும்                  (lbi d. AK. 71)அரிசிக்கரையில்உள்ளவீரவல்லாள தேவன்                  கல்வெட்டொன்றுகூறுகிறது.இப்புறப்பாட்டில்முனிவனென்றும்,                  துவரை யென்றும் புலிகடிமால் என்றும் வருவனவற்றைக்கொண்டு, இந்த          ஹொய் சளக் கதை ஈண்டு நினைக்கப்படுகிறது. மற்று, மேற்கு மலைத்          தொடர்ப்பகுதியினர், நாற்புறமும் மலைமுடிகள் சூழ்ந்த இடை நிலத்தைக்          தடவென்றும் கோட்டமென்றும் கூறுதலால், முனிவன் தடவென்றது,          முனிவனொருவன் இருந்த மலைமிசை யிடைநிலமென்றும், அந்நிலத்து          வாழ்ந்த வேளிர் தலைவனொருவன், அப் பகுதிக்குக் கிழக்கில் உள்ள          புலிநாடென்றும்பன்நாடென்றும்வழங்கியகன்னட நாட்டு வேந்தனை                  வென்றது பற்றிப் புலிகடிமால் எனப்பட்டான் என்றும் கொள்வது நேரிதாகத்         தோன்றுகிறது.அந்நாளில்  அப்பகுதியையாண்ட ஆந்திர         சாதவாகன          வேந்தருள் புலிமாய் என்பான் சிறந்து விளங்கினமையின் ஒருகால் அவனை          வென்றதுபற்றி இருங்கோவேள் புலிகடிமால் எனப்படுவானாயினன் என்றும்          கொள்ளலாம். மேனாட்டு யவனரான தாலமியும் இப் புலிமாய் வேந்தனைக்          குறித்துரைத்துள்ளார்; சாதவாகனராட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே          தொடர்ந்திருக்கிறது; அந்நாளிலேயே துவராவதி (துவரை) நகரம்          அந்நாட்டில் இருந்திருக்கிறது. ஸ்ரீ புலுமாவி, புலிமாயி எனக் காணப்படினும்          கன்னட மொழியில் அது புலிமெய் என வழங்கும் என்றும், புலிபோலும்          மெய்வலியுடைய னென்பது பொருளென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.          இவ்வாற்றால் ஹொய்சளக் கதையினும் இது பொருத்தமாதல் காணப்படும்.          இப் புலிகடிமால் வழிவந்த இருக்கோவேளிர்களுட் பலர் புதுக்கோட்டைப்          பகுதியில் வாழ்ந்திருந்தனரென அப் பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள்          காட்டுகின்றன. கொடும்பாளூரிலிருந்து வாழ்ந்த வேளிரும் இருங்கோ          வேளிரே;பிற்காலத்தே அவர்கள் இருக்குவேளிர் எனத் தம்மைக் கூறிக்          கொள்வாராயினர். இவ் வேளிர்கள் வேளகத்தி (Balgam) லிருந்து கங்கநாடு         கொங்குநாடுகளின் வழியாகத் தென்னாடடைந்தவர். இனி, வேளிர்கள்                  முதற்கண் வாழ்ந்த மலைநாடு பொன்வளம் படைத்தவையாதலின்          பொன்படுமால்வரைக் கிழவ என்றாரென்றுமாம்.  |