| 202. இருங்கோவேள் பாரிமகளிரையான்தரநீமணந்துகொள்கஎன வேண்டிக் கொண்ட கபிலர் வேண்டுகோளை இருங்கோவேள் மறுத்துவிட்டான். அம் மறுப்புக் கபிலரது செந்நாப்புலமையை இகழ்ந்த குறிப்புடைத் தாயுமிருந்தது. வேள்பாரி எவ்விகுடியிற் பிறந்த செவ்வியன் என்றும் அப்பெரியோனுடைய மகளிர் இவரென்றும் தாம் தெளியக்கூறிய கூற்றை அவன் தெளிந்துகொள்ளாமைக்குவருந்தினார். தம் சொல்லைப் பொய்ப்படுத்திய இருங்கோவேள்பால்கபிலர்க்கு அருவருப்பும்சினமும்உண்டாயின; வேளே,நின்னாட்டில்பொன்வளஞ்சிறந்தோங்கிச்சிற்றரையம் பேரரையமென இருபகுதித்தாய் விளங்கிய அரையமென்னும் மூதூர் இன்று அழிந்து கிடத்தற்குக் காரணம்அறியாய்;கூறுவேன்கேள்: நின் முன்னோருள் நின்னைப் போலும் அறிவுடைய ஒருவன் செந்நாப் புலவரான கழாஅத்தலையாரைஇகழ்ந்தனன்; அவ்விகழ்ச்சிபொறாது அவரும் சினந்தனர். அதனால் விளைந்த கேடுதான் அரையத்துக் குண்டாகிய கேடு. இவர்கள்எவ்விகுடியிற்பிறந்தவரென்றும் பாரிமகளிரென்றும் கூறிய என்சொல், தெளிவில்லாப் புன்சொல்லெனஎள்ளி இகழ்ந்தனை; யான் கூறியதனைப்பொறுத்துக்கொள்க. யான்விடைபெற்றுச் செல்வேன், நின்வேல்வென்றி யெய்துக வென இப்பாட்டின்கட் பாடிக் காட்டிவிட்டு நீங்கினார். இப்பாட்டின்கண் ஆங்காங்கு இவர் இகழ்ந்து கூறும் பகுதி இலக்கிய இன்பந்தருவனவாம்.
| வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக் கட்சிக் காணாக் கடமா நல்லேறு கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக் கடிய கதழு நெடுவரைப் படப்பை | 5 | வென்றி நிலைஇய விழுப்புக ழொன்றி | | இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்க் கோடிபல வடுக்கிய பொருமணுமக் குதவிய நீடுநிலை யரையத்துக் கேடுங் கேளினி நுந்தை தாய நிறைவுற வெய்திய | 10 | ஒலியிற் கண்ணிப் புலிகடி மாஅல் | | நும்போ லறிவி னுமரு ளொருவன் புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே யியறே ரண்ணல் எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர் | 15 | கைவண் பாரி மகளி ரென்றவென் | | தேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும விடுத்தனென் வெலீஇயர்நின் வேலே யடுக்கத் தரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ தாய துறுகல் |
|