| முரசு முழங்கும் பெருமை பொருந்திய தானையையுடைய; அண்ணல் யானைவழுதி - தலைமை பொருந்திய யானைப் படையாற் சிறந்த வழுதி; என் பெருங்கிளைப்புரவு கண்மாறலீயர் - என் பெரிய சுற்றத்தாரைப் புரத்தற்கு வேண்டும் அருளைச் செய்யாதொழிவானாக; எ- று.
விளைவயல் பயன்தாராது கெடுதற்குப் பள்ளங்கள் நீர்வற்றுதலா தலின், விளைவயற் பள்ளம் வாடிய பயனில்காலை என்றார். கிணைப் பொருநனைக் கிணைமகன் என்ப. பெரும்பெயர்ப் பண்ணன் எனஇயையும்; பெயரென்றுது ஈண்டுப் புகழ்மேனின்றது. கிணைமகன் தக் வறுமையைக் குறிப்பால் உணர்த்திய அப்பொழுதே சிறிதும் தாழ்க்காது தான் உடையவற்றை வழங்கினமை தோன்ற அந்நிலை யெனப் பட்டது; அந்நிலையே கெட்டான் எனப்படுத என்று (குறள். 967) என்றாற ் போல. கடக்கையும் மருப்பும் கூறி அவற்றையுடைய களிற்றைக் கூறாமையின், இஃது ஏகதேசவுருவகம். நுண்ணிய நூற்கேள்வியாலாகும் அறிவாற் செயல் நலம் சறிப்புறுதலின் அதனைத் தடக்கையாகவும் அறிவாற் செயல் நலம் சிறப்புறுதலின் அதனைத் தடக்கையாகவும் சொற்போர் வல்லாரை வேறற்கு நற்கருவியாதலின் நாவை மருப்பாகவும் உருவகம் செய்துள்ளார். உழுதற்றொழிலில் நன்கு பயின்ற எருதுகள் வினைப்பக டெனப்பட்டன. வினைப்பகடேற்ற மேழி கிணைதொடா என்ற பாடத்துக்குப் பகடும் ஏற்றமும் மேழியும் பண்ணற்குப் பெருங்கருவியாய் உழவுவளம் மேம்படுதற்குதவுதலின் அவற்றைப் பாடுவது அவளைப் பாடுவதா மென்பது கொண்டு கிணைதொடாப் பாடேனாயி னென்றாரெனக் கோள்க. ஏத்துதற்குரியாரை ஏத்தாமை நன்றி கொல்லும் குற்றமாதலின் அதுகுறித்து வழுதி கண்மாறுவானாக என்றார். இது வஞ்சினம், கண்மாறலீயர் - கண்மாறுக; அருள் கண்மாறலோ மாறுக (அகம். 144) என இம் மள்ளனார் கூறுவது காண்க.
விளக்கம்: இப் பாட்டின்கண் ஆசிரியர் மள்ளனார் தொடக்கத்தில் பண்ணன் கிணைவனுக்கு வழங்கிய கொடையினையும், பின்னர்ப் புலவர் கட்குச் செய்யும் பேருதவியையும் பாடி, இறுதியில் அவன் நலம் பாராட்ட வழிநன்றிகொன்ற குற்றத்துக்காகப் பாண்டியன் தம்பால் அருள் கண்மாறுக என்று உரைக்கின்றார். வறம் மிக்க காலத்தில் கிணைவன் சிறு கிழான் பண்ணனைப் பாடிச் சென்று, தன்னி்லை அறியுநனாக அந்நிலை இடுக்கண் இரியல்போக உடைய கொடுத்தான் என்றார். வெள்ளி தென்புலத்துறைய விளைவயற் பள்ளம் வாடிய பயனில்காலை என்பதை எடுத்தோதுதலால், சிறுகுடிகிழான் பண்ணன் மழைவளத்தால் விளையும் விளைவே விளைவே வருவாயாக வுடையன் என்பது பெற்றாம். புலவர்கட்கு விளைநிலம் பெயர்க்கும் என்பது புலவர்பால் அவன்கொண்ட பேரன்பு குறித்து நிற்கிறது. பண்ணன் உழவுத்தொழிலால் பெருவளம் பெற்றுக் கொடைக்கடன் இறுக்கும் புகழுடையனாதலால், அவனுடைய பகடும் ஏற்றமும் புகழ்ந்து பாடப்படுவனவாயின. அருள்செய்தற்குரிய வழுதி, புகழ்தற்குரிய பண்ணனை யான் புகழேனாயின், என் பெருங் கிளைபால் அருள்செய்யா தொழிதல் கொடுமையாகாமையின் அவன் அது செய்க என்றான். --- |