பக்கம் எண் :

420

     

389. நல்லேர் முதியன்

     தமிழகத்தின் வடவெல்லையாக விளங்கும் திருவேங்கடத்தின்கண்
இருந்து பண்டைநாளில்  அப்  பகுதியையாண்ட  வேந்தர்களான  புல்லி
ஆதனுங்கன் முதலியோர் வழித்தோன்றல் இந்த நல்லேர் முதியன். இவனுடைய
முன்னோனாகிய ஆதனுங்கனைப் பாடிப் பரிசில் பெற்றுச்
சிறப்பெய்திய கள்ளில் ஆத்திரையானரென்னும்  சான்றோர்  ஒருகால்
முதியனைக் காணச் சென்றார். அக்காலை ஆதனுங்கன் செய்த சிறப்பை
யோதுவாராய், யான் பண்டு வந்திருந்தபோது இளையனாயிருந்தேன்;
என்னை நோக்கி, “பிள்ளைப் பொருந, வெள்ளிமீன் வறனுண்டாதற்குரிய
திசைக்கட் செல்லுங்கால்   நின்னால் நினைக்கப்படுவாருள்  எம்மையும்
மறவாது நினைப்பாயாக” என்று சொல்லி வேண்டுவன  நல்கினன்.
அத்தகைய வள்ளியோன் இன்று யான் சென்றுகூடும் இடத்தில் இல்லை;
சென்றால்  காணமாட்டாத இயல்புடையனுமல்லன்; அவன்
இவ்வேங்கடத்துக்கு   உரியவன்;   என்று  கூறி, “நல்லேர் முதியனே,
அந்த ஆதனுங்கன்போல நீயும் எம் பசிப்பிணி தீர வீறுடைய
நன்கலங்களை நல்குக; பெருமானே; நின் நெடுமனை முற்றத்தே
நின்மகளிர் சாப்பறை முழக்கம் கேளாதொழிவார்களாக” என்று இப்
பாட்டின்கண் கூறியுள்ளார். ஆத்திரையனாருடைய  கள்ளில்  என்று
மூரைத் “தொண்டை நாட்டுப் புழற் கோட்டத்துக்  குன்றிகை  நாட்டுத்
திருக்கள்ளில்” (A.R. 486 of 1926) என்று கல்வெட்டுக் கூறுகிறது.
இவ்வூரிலுள்ள சிவனைத் திருஞான சம்பந்தர் “கள்ளின் மேய அண்ணல்”
(119:1) என்று பாடினாராகக் கல்வெட்டுக் காலத்தவர் தவறாகக்“கள்ளின்”
மெனப்   பொறிப்பாராயினர்.  இதற்குக்  கள்ளுரென்றும்  பெயர
(A.R. No. 490 of 1928) உண்டு. இனி ஆசிரியர் கடுவன் மள்ளனார்
கூறும் “தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக், கரும்பமல் படப்பைப்
பெரும்பெயர்க் கள்ளுர்” (அகம். 253) இஃதெனக் கருதுவோரும் உண்டு.
இதற் கிப்போது மடவிளாகம் என்பது பெயர்.

 நீர் நுங்கின் கண்வலிப்பக்
கானவேம்பின் காய்திரங்கக்
கயங்களியுங் கோடையாயினும்
ஏலா வெண்பொன் போகுறு காலை
5எம்மு முள்ளுமோ பிள்ளையச பொருந
 என்றீத் தனனே குசைசா னெடுந்தகை
இன்றுசென் றெய்தும் வழியனு மல்லன்
செலினே காணா வழியனு மல்லன்
புன்றலை மடப்பிடி யினையக் கன்றுதந்து
10குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
 கல்லிழியருவி வேங்கடங் கிழவோன்
செல்வுழி யெழாஅ நல்லேர் முதிய
ஆத னுங்கன் போல நீயும்
பசித்த வொக்கற் பழங்கண் வீட