பக்கம் எண் :

421

     
15வீறுசா னன்கல நல்குமதி பெரும
 ஐதக லல்குன் மகளிர்
நெய்தல்கே ளன்மார் நெடுங்கடை யானே.

   திணையும் துறையு மவை. நல்லேர் முதியனைக் கள்ளில்
ஆத்திரையனார் பாடியது.

     உரை:நீர்  நுங்கின்  கண் வலிப்ப - நீர் நிறைந்து மெல்லி தாயுள்ள
பனைநுங்கு  வற்றிக்  கற்ோல்  வலிதாக;  கான வேம்பின் காய் திரங்க -
காட்டிலுள்ள வேம்பினுடைய காய்கள் முற்றாது உலர்ந்துகெட்; கயங் கறியும்
கோடைக்காலமாயினும் - ஆழ்ந்த   நீர்நிலை   வற்றிப்  பிளவுற்றுக்கிடக்கும்
கோடைக்காலமாயினும்;  ஏலா  வெண்பொன் போகுறுகாலை - வெள்ளியாகிய
மீன் தெற்கின் கட் சென்று வறம்செய்யும் காலையாயினும்; பிள்ளையம்
பொருத - பிள்ளைப்பருவங்  கடவாத  பொருநனே; எம்மும் உள்ளுமோ -
நின்னால் நினைக்கப்படுவோருள் எம்மையும் நினைப்பாயாக; என்று ஈத்தனன்
- என்று சொல்லிப்  பெருவளம்  நல்கினான்; இசைசால் நெடுந்தகை - புகழ்
நிறைந்த நெடிய  தகைமையினையுடைய தலைவன்; இன்று சென்று எய்தும் -
காணும் இடத்தில்  உள்ளான்  அல்லன்; செலின் காணா வழியனுமல்லன் -
சென்றால் காணவியலாத  அருஞ்செவ்வி  யுடையனுமல்லன்; - புன்றலை
மடப்பிடி இனைய-புல்லிய  தலையையுடைய  பிடியானை வருந்த; கன்று தந்து
- அதன் கன்றைக்  கொணர்ந்து;  குன்றக  நல்லூர்  மன்றத்துப் பிணிக்கும் -
குன்றை ஊரகத்தேயுடைய  நல்லவூரின்  மன்றத்தே பிணித்துவைக்கும்;
கல்லிழியருவி வேங்கடம்  கிழவோன் - கற்களினூடே  யோடி யிழியும்
அருவிகளையுடைய வேங்கடத்துக் குரியவனான;செல்வுழி  எழாஅ நல்லேர்
முதிய -தன் மனம் செல்லுமிடமெல்லாம் சேற்ற கெழாத நல்லேர் முதியனே;
ஆதனுங்கன் போல - நின் முன்னோனாகிய ஆதனுங்கன்போல; நீயும்-;பசித்த
ஒக்கல் பழங்கண் வீட - பசித்த என் சுற்றத்தாருடைய துன்பம் கெட்; வீறுசால்
நன்கலம் நல்குமதி - சிறப்பமைந்த  நல்ல  கலன்களை  நல்குவாயாக; ஐதகல்
அல்குல் மகளிர் - மெல்லிதாய்  அகன்ற  அல்குலையுடைய  நின் மகளிர்;
நெடுங்கடை நெய்தல் கேளன்மார் - நின் பெருமனையின் நெடிய முற்றத்தில்
நெய்தற்பறையே கேளா தொழிவார்களாக; எ- று.

     
கோடை  மிகுந்த காலை பனைநுங்கு நீர்வற்றிக் கற்போல் வலிதாகலும்
கயங்கள்  வற்றி  அடிப்பகுதி  வெடித்துப்பிளந்து கிடப்பதும் இயல்பாதலால்
“நுங்கின்கண் வலிப்ப”  வென்றும்  “கயங்களியும்” என்றும் கூறினார். “ஏலா
வெண் பொன்” என்றது வெள்ளியாகிய மீனுக்கு வெளிப்படை போகுறு காலை,
வறஞ்செய்தற்பொருட்டுத் தெற்கேகுங் காலம்.