நெடிய காட்டிடத்து மலரும் பூக்களின் மணம் கமழும் விழாவாற் பொலியும் அகன்ற மன்றத்தையொத்த; முற்றத்து - நெடுமனை முற்றத்தின்கண்; ஆர்வலர் குறுகினல்லது காவலர் கனவிலும் குறுகாக் கடியுடை வியனகர் - அன்பராயினார்க்கன்றி மாறுகொண்ட வேந்தராயினார்க்குக் கனவின்கண்ணும் சென்று சேர்தற்கியலாத காவலையுடைய அகன்ற நகரின்கண் புகுந்து; மலைக்கணத் தன்ன மாடம் சிலம்ப-மலைகளின் கூட்டத்தையொத்த மாடங்கள் எதிரொலிக்க; என் அரிக்குரல் தடாரி இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச் செய்யும் தடாரிப்றை கிழியும்படி யறைந்து; பன்னாள் பாடி நின்ற(து) அன்றியும் - பன்னாள் பாடி நின்றதில்லையாகவும்; சென்று ஞான்றைச் சென்று படர் இரவில் வந்ததற்கொண்டு - சென்ற நாளில் அன்றைய இரவுப் போதிலே வந்ததுகொண்டு; நெடுங்கடை நின்ற புன்றலைப் பொருநன் அளியன் என - நமது நெடுமனை முன்றிலில் நின்று பாடும் புல்லிய தலையையுடைய பொருநன் அளிக்கத்தக்கவன் என்று; தன்னுழைக் குறுகல் வேண்டி - யான் தன்பால் அணுகுவது குறி்த்து;என் அரை முதுநீர்ப் பாசி அன்ன உடை களைந்து -என் இடையிலிருந்த பழைமையான நீர்ப்பாசிபோல் சிதர்ந்திருந்த ஆடையை நீ்க்கி; திருமலர் அன்ன புதுமடி கொளீஇ -அழகிய பகன்றை மலர் போன்ற புத்தாடை கொடுத்துடுப்பித்து; மகிழ்தரல் மரபின் மட்டேயன்றியும் - களிப்பினைத் தரும் முறைமையினையுடைய கள்ளோடும்; அமிழ்தன மரபின் ஊன்துவையடி சில் - அமிழ்து போற் சுவையுடைய ஊன்துவையலோடு கூடிய சோற்றை; வெள்ளி வெண்கலத்து ஊட்டலன்றியும் - வெள்ளியாலாகிய வெள்ளிய கலத்தே பெய்து உண்பித்ததோடு; முன்னூர்ப் பொதியில் சேர்ந்த - ஊர்க்கு முன்னிடமான மன்றத்தில் தங்கியிருந்த; மென்டை இரும்பேரொக்கல் பெரும்புலம்பு அகற்ற - தளர்ந்த நடையினையுடைய பெரிய சுற்றத்தார் என் பிரிவால் உண்டாகிய தனிமைப் பெரும்துயரைப் போக்க; அகடுநனை வேங்கை வீ கண்டன்ன - தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கபை் பூவைக் கண்டாற்போன்ற; பகடுதரு செந்நெல் போரொடு நல்கி - உழவெருதுகளைக் கொண்டு உழுது வினளவித்த செந்நெல்லை இப்பொருளைப் பெற்றுக்கொள்க என்று சொல்லிக் கொடுத்தான்; உண்டுறை மலை யலர் அணியும் தலைநீர் நாடன் - நீர்கொள்ளும் துறைக்கண் மலையிடத்துப் பூத்த பூக்களைக் கொணர்ந் தொதுக்கும் தலை நீரால் வளம் பொருந்திய நாட்டையுடையவன்; கண்டால் மனைகொண்டு திருந்தடி வாழ்த்தி - அவனைக் கண்டால் மனையிடத்தே அழைத்துச் சென்று அவனுடைய |