| தெளிவாகிறது. இவன்பால் ஒருகால் ஆசிரியர் கல்லாடனார் வந்து பரிசில் பெற்றுச் சென்றார். கல்லாடனார் தொண்டை நாட்டின் வட பகுதியில் உள்ள கல்லாடமென்னும் ஊரில்வாழ்ந்த சான்றோராதலால் ஒருமுறை அவர் தம்முடைய வேங்கடநாடு வற்கடத்தும் வருத்தம் மிகப்பெறவே,தம்முடைய சுற்றத்தாருடனே சோழநாட்டுக்கு வந்தார். சோழநாட்டுப் பொறையாற்றுகிழானான பெரியனைப் பண்டும் ஒருமுறை கண்டு அவனால் சிறப்பிக்கப்பெற்றுள்ளாராதலால் நேரே பொறையாற்றுக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டோர் முன்பே அவர் வந்தவராதலின், அவரது நிலைமையை யுணர்ந்து பெரியனைச் சென்று காணுமாறு அறிவித்தனர். அவர்கள் கண்டோர் முன்பே அவர் வந்தவராதலின், அவரது நிலைமையை யுணர்ந்து பெரியனைச் சென்ற காணுமாறு அறிவித்தனர். அவர்கள் பெரியன் மனக்கோளை நன்குணர்ந்தவராதலின், கல்லாடனாரும் பெரியனைக் கண்டார்,அவன் உயர்ந்த உணவும், சிறந்த உடையும் தந்து அவரையும் அவர் சுற்றத்தாரையும் ஆதரித்தான். அதனால் பெருமகிழ்வு கொண்ட கல்லாடனார் “பெரும், நீ நின் செழுமனனக்கண் நின் காதலியுடனே இனிது கண்டுயில்வாயாக; அஃதாவது பசியும் பிணியும் பகையுமென்றிவற்றால் நாடாள்வார்க் குண்டாகும் மனக்கவலை நினக்கு உண்டாகா தொழிக” என்பது, வானம் செவ்வியறிந்து மழைபொழிய “வயல்கள் வேலி ஆயிரமாக வினளக” என்று வாழ்த்தி யின்புற்றார். இந்நிகழ்ச்சி இப்பாட்டாய் உருக்கொண்டு விளங்குகிறது. இதனிடையேயும் சில அடிகள் சீர் சிதைந்துள்ளன. செந்தமிழ் மக்கட்குண்டான சீரழிவு, அரசியல், வாணிகம் சமயம், சமுதாயம் முதலிய துறைகளோடே நில்லாது இலக்கியத் துறையினும் நுழைந்து எத்துணைக் கேட்டினைச் செய்துளது, காண்மின் : | தண்டுளி பலபொழிந் தெழிலி யிசைக்கும் விண்டு வனைய விண்டோய் பிறங்கல் முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப் பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற | 5 | திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி | | அரிய லார்கைய ருண்டினி துவக்கும் வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென ஈங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல் தீர்கை விடுக்ழும் பண்பின் முதுகுடி | 10 | நனந்தலை மூதூர் வினவலின்... | | முன்னும் வந்தோன் மருங்கில னின்னும் அளிய னாகலிற் பொருத னிவனென நின்னுணர்ந் தறியுந ரென்னுணர்ந்து கூறக் காண்கு வந்திசிற் பெரும மாண்டக | 15 | இருநீர்ப் பெருங்கழி நுழைமீ னருந்தும் | | துதைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும் புதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் நெஞ்சமா காத னின்வெய் யோளொ டின்றுயில் பெறுகதில் நீயே வளஞ்சால் | 20 | துளிபத னறிந்து பொழிய | | வேலி யாயிரம் விளைகநின் வயலே. |
|