பக்கம் எண் :

427

     

கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. வியன்கண் மன்ன முற்றத்து, வியனகர்,
மாடம்  சிலம்ப,  தடாரி  ஒற்றி, பாடிநின்ற தன்றாக, கொண்டு, என, குறுகல்
வேண்டி,  களைந்து,  கொளீஇ,  ஊட்டலன்றியும்,  ஒக்கல் புலம்பகற்ற, நல்கி,
பெறுக என்றேன், நாடன், அறியலரும் காண்பறியலரும் என்பர் எனக் கூட்டி
வினை முடிவு செய்க.

     விளக்கம்: அதியமான் கொடைநலத்தைக் கிணைப்பொருநன் ஒருவன்
கூற்றில்   வைத்து   ஒளவையார்  அறிவுறுத்திகின்றாராகலின்,   முதற்கண்
அதியமானது  வியனகர் மாடச்சிறப்புக் கூறுகின்றார்; பின்பு அதியமான் தன்
நெடுங்கடை  நின்று பாடும் கிணைவனை வரவேற்ற நலத்தை யெடுத்தோதி
அவன்  நல்கிய பெருவளத்தை விரித்துரைத்து இறுதியில் அவனைக் கண்டு
பரிசில் பெறாது வறுமையுற்று வருந்தும் ஏனை இரவலர் பொருட்டுப் பரிந்து
சில கூறி முடிக்கின்றார். அதியமானது வியனகர் ஆயரும் சிறுகுடி மறவரும்
சேர்ந்து செய்யும் பூக்கமழ் பிழாக்களம்போல் கண்ணுக்கினியகாட்சி வழங்கும்
என்பார்,  “அறவை நெஞ்சத் தாயரும்... வியன்கள மன்ன முற்றத்து” என்றும்,
அதன் காவற் பெருமையைக் “காவலர் கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர்”
என்றும்   கூறினார்.  ஏனைப்புரவலர்  பால்  கினணப்பொருநர்  சென்றால்,
பன்னாள்நின்று  அவரைப்பாடுவர்:  பின்னரே  அவர்  பரிசில் தரப்பெறுவர்;
அவ்வாறன்றிச் சென்ற நாளே பரிசில் நல்கப்பெற்றமை தோன்ற, “பாடிநின்ற
பன்னாளன்றியும் சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் வந்ததற்கொண்டு”
என்றான், அவன் தந்த கொடையினை, புதுமடியும் பட்டும் அடிசிலும் நல்கி
“அகடுநனை வேங்கை வீ கண்டன்ன, பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டிபெறு கென்றோனே” என்றவர், இரவலர் பலர், “அடுபசி போக்கல்
வான் அறியல என்பர்; அண்ணல் யானைவேந்தன் உண்மையோ அறியலர்
காண்பறியலர்” என வருந்துவது கண்டு பரிந்து கூறுகின்றார். இவ் வண்ணம்
பரிசில்பெற்ற கினணப்பொருநன் மகிழ்ந்து கூறவது பொருளாக ஒளவையார்
அதியமான் சிறப்பைத் தாம் நேரிற் கண்டவாறே யுரைத்துள்ளார்.

---

391. பொறையாற்றுகிழான்

     பொறையாறு என்பது சோழநாட்டில் கடற்கரையிலுள்ள தோரூர். இதனைப்
புறந்தையென்றும்  சங்கச் சான்றோர் மருவி வழங்குப். விரியிணர்ப் புன்னையங்
கானற் புறந்தை” (அகம். 100) என வருதல் காண்க. கி.பி. பத்துப் பதினோராம்
நூற்றாண்டில்   இப்   பொறையாறு,  குறும்பூர்   நாட்டுத்   தேவதானமான
திருவிடைக்கழிக்குப் (A. R. No. 267 of 1925) பிடாகையா (A. R. No. 234 of
1925) வழங்கிவந்திருக்கிறது. அப்பகுதியில் இரண்டாம் இராசராசன் காலத்தில்
குன்றத்து நாராயணன் என்பவனால் வடமொழி வேதாந்தக் கல்லூரி யொன்று
(A. R. No. 276 of 1925) நிறுவப் பெற்றிருந்தது. இந்நாளில் அப்பகுதி கல்வி
மணம்குன்றாது  வளஞ்சிறந்து  விளங்குவது  ஈண்டுக்  குறிக்கத்தக்கது. இப்
பொறையாற்று கிழான் பெரியன் எனப் படுவன். “நறவுமதி ழிருக்கை நற்றேர்ப்
பெரியன்,  கட்கமழ்  பொறையாறு”  (நற்:131)  என்றும்,  “பாடுநர்த்தொடுத்த
கைவண்கோமான் பரியுடை நற்றேர்ப் பெரியன்” (அகம். 100) என்றும் ஆசிரியர்
உலோச்சனார்  கூறுதல்  காண்க.  ஆகவே  புலவர்  பாடும் புகழ் படைத்த
பெரியன்.   பாடும்    பணிமேற்கொண்ட    புலவர்    பாணர்  பொருநர்
முதலாயினார்க்குப் பேராதரவு புரிந்து வாழ்ந்த பெருந்தகையென்பது