பக்கம் எண் :

432

     

     திணையும் துறையு மவை. அதியமான் மகன் பொகுட் டெழினியை
ஒளவையார் பாடியது.


     உரை:
மதியேர்  வெண்குடை  அதியர்  கோமான் - முழுமதி போன்ற
வெண்கொற்றக் குடையை யுடைய அதியர் வேந்தனான்; கொடும்பூண் எழினி -
வளைந்த  மாலை  யணிந்த  எழினியினுடைய;  நெடுங்கடை  யான் நின்று -
பெருமனையின் நெடிய முற்றத்திலே யான் நின்று; பசலை நிலவின் பனிபடு
விடியல் - இள நிலவு திகழும் பனி சொரியும் விடியற்காலத்தே; பொருகளிற்று
அடிவழி யன்ன - போர்யானையின் அடிச்சுவடுபோல் வட்டமான; என் கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு - என் கையிலிருந்த ஒரு கண் மாக்கிணையை
யறைந்து; கொடாஅ உருகெழு மன்னர் ஆரெயில் கடந்து - திறை கொடாத
உட்குப் பொருந்திய மன்னருடைய அரிய மதிலை வஞ்சியாது பொருதழித்து;
நிணம்படு குருதி பெரும்பாட் டீரத்து - தசையும் குருதியுந் தோய்ந்த கெருக்கா
லுண்டாகிய  ஈரம் பொருந்திய; அணங்குடை மரபின் இருங்களந்தோறும் -
துன்பந்தரும்     தெய்வங்களுறையும்    முறைமையினையுடைய     பெரிய
போர்க்களந்தோறும்;  வெள்வாய்க்  கழுதைப்  புல்லினம் பூட்டி - வெள்ளி
வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டியுழுது; வெள்ளை வரகும்
கொள்ளும்  வித்தும் - கவடியும்    குடைவேலும்  வேந்தே; வைகல் உழவ -
இடையறாத போராகிய உழவைச் செய்யும் வேந்தே; பெரிது வாழிய என - நீ
நெடிது வாழ்வாயாக என்று பாடிக் கொண்டு; சென்று யான் நின்றனென் ஆக -
சென்று யான்  அவன்  முற்றத்தே  நின்றேனாக;  அன்றே - அப்பொழுதே;
ஊருண்கேணிப்  பகட்டிலைப்  பாசிவோர்  புரை  சிதாஅர்  நீக்கி - ஊரவர்
நீர்கொள்ளும்  கேணியிற்  படர்ந்த  பெரிய   இலையையுடைய  பாசியினது
வேர்போற் கிழிந்த உடையைக் களைந்துவிட்டு; நேர்கரை நுண்ணூற் கலிங்கம்
உடீஇ - நேரிய கரையை யுடைய நுண்ணிய நூலானியன்ற உடையைத் தந்து
உடுப்பித்து; உண்மென - உண்மினென்று; தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் -
தேளினது கடுப்புப்போல் நாள்படப் புளிப்பேறிய கள்ளை; கோள்மீன் அன்ன
பொலங்கலத்து அளைஇ -கோளாகிய மீன் போன்ற பொன்வள்ளத்திற் பெய்து;
ஊண்முறை   ஈத்தல்   அன்றியும் - உண்ணும்   முறைப்படி  அளிப்பதன்றி;
கோள்முறை விருந்து இறை நல்கியோன் - கொள்வார் கொள்ளும் முறையில்
விருந்தாய்   எம்மை   இருத்தி   யுண்பித்தான்;   அந்த   ரத்து - கடற்கு
அப்புறத்ததாயுள்ள நாட்டிலுள்ள; அரும் பெறல் அமிழ்தம் அன்ன- பெறற்கரிய
அமுதம்போன்ற;   கரும்பு  இவண்  தந்தோன் - கரும்பை   இந்நாட்டிற்குக்
கொண்டுவந்தவனுடைய; பெரும் பிறங்கடை - பெரிய வழித்தோன்றல் எ - று.