392. அதியமான் பொகுட்டெழினி அதியமான்நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. இவன் அதியமான் உயிரோடிருக்கும்போதே தந்தைக்குத் துணையாய் நின்று அரசியலில் ஈடுபட்டிருந்தான்.அதியமானால் பெரிதும் ஆதரிக்கப் பெற்ற ஒளவையார்பால் எழினிக்கும் பேரன்புண்டு. அவனைப் பன்முறையும் பாடிப் பரிசில் பெற்றவர் ஒளவையார். ஒருகால் அவர் பொகுட் டெழினியின் தகடூர்க்குச் சென்றிருந்தபோது அவன் செய்த சிறப்பைப் பொருநன் ஒருவன் எழினியின் பெருமனையின் முற்றத்தில் விடியற் காலையில் நின்று தன் ஒருகண் மாக்கிணை யென்னும் பறையைக் கொட்டிப் பணிந்து திறைசெலுத்தாத பகைமன்னர் அரண்களைக் கடந்து சென்று அவரை வென்று கழுதையேர் பூட்டி, வீழ்ந்த வீரர் உடற்குருதி தோய்ந்து ஈரம்புலராத போர்க்களத்தை யுழுது வெள்வரகும் கொள்ளும் வித்தும் மறம்மிக்க வேந்தே, நீ வாழ்வாயாக என்று பாடி நின்றானாக,அப்பொழுதே பாசிபோற்பீறிக்கிடந்த அவனது உடையைக்களைந்து நுண்ணூல் ஆடையொன்று தந்து அவனை யுடுப்பித்துக் களிப்பு மிக்க தேறலைப் பொற்கலத்திற் பெய்து அவனும் அவனொடு போந்த அவன் சுற்றத்தாரும் உண்டு தேக்கெறியு மளவுந் தந்து விருந்து செய்தான் என்று பாடியுள்ளார். | மதியேர் வெண்குடை யதியர்கோமான் கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான் பசலை நிலவின் பனிபடு விடியற் பொருகளிற் றடிவழி யன்ன வென்கை | 5 | ஒருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ | | உருகெழு மன்ன ராரெயில் கடந்து நிணம்படு குருதி பெரும்பாட்டீரத் தணங்குடை மரபி னிருங்களந் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி | 10 | வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் | | வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றனெனாக வன்றே ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீ்க்கி நேர்கரை | 15 | நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத் | | தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ ஊண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை விருந்திறை நல்கி யோனே யந்தரத் | 20 | தரும் பெற லமிழ்த மன்ன | | கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே. |
|