| மான்கள் சேரர்குடியினராதல் கூடாதெனக் கருதுகின்றனர். * பண்டை நாளைச்சேரர் சோழபண்டியர், தனித்தனியே தத்தம் குடியிற் பிறந்து தம் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து ஆட்சி செய்தோருடனே போர் உடற்றியிருத்தலின், அதனால் அவர் குடி வேறுபட்டவராகக் கருதுவது கிடையாது. ஆதனால் அதியமான்கள் என்றுமே சேரர் குடிக்கு உரியவ ரென்பது துணிவான செய்தியாகும். இனிப்பாண்டியன் நெடுஞ்சடையனுடைய செப்பேடொன்று + மாயிரும்பெரும்புனல் காவிரி வடகரை, ஆயிர வேலியயிரூர் தன்னிலும், புகழியூரிலுந் திகழ்வேலதியனை ஓடுபுறங்கண்டவன் ஒலியுடை மணித்தேர்,ஆடல்வெம்மா வவையுடன் கவர்ந்ததும்,பல்லவனுங் கேரளனு மாங்கவற்குப் பாங்காகிப், பல்படையொடு பார்ஞெளியப் பவ்வமெனப் பரந்தெழுந்து, குடபாலுங் குணபாலு மணுகவந்து விட்டிருப்ப, வெல்படையொடு மேற்சென்றங், கிருவரையு மிருபாலு மிடரெய்தப் படைவிடுத்துக், குடகொங்கத்தடன் மன்னனைக், கொல்களிற்றொடுங் கொண்டுபோந்து, கொடியணி மணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்தும் என்று கூறுவதனால், நெடுஞ்சடையன் பராந்தகன் காலத்தில் அதியமான் ஒருவன் பல்லவரையும் கேரளரையும் துணைகொண்டு பாண்டியனோடு பொருது தோற்றுக் கூடல் நகரில் சிறையுற்றானென்று அறிகின்றோம். ஆயினும் இப் போரில் மீகொங்கெனப்படும் மேலைக் கொங்குநாட்டு வேந்தனும் கலந்திருத்தலின், அதியமான்கள் இக்காலத்தே கொங்குநாடு முற்றும் புகழ்கொண்டு விளங்கினரென்பது தெளிவாகிறது. சேலநாட்டு நாமக்கல்லிலுள்ள அரங்கநாதர் கோயில் கல்வெட்டொன்று (8) அதியமான் குடியைக் குறிப்பிட்டு, அங்குள்ள கற்குகையை அதியேந்திர விஷணுகிரகம் என்று குறிப்பதால், அதியமான்களின் குடிவரலாறு தமிழகத்தில் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து வந்திருத்தலைக் காணலாம். இதன் விரிந்த செய்தியை இவ்வுரைகாரர் எழுதிய அதியமான் நெடுமான் அஞ்சி என்ற தனி நூலிற் கண்டுகொள்க.
இதன்கட் கிணைப்பொருநன் சென்று பொகுட்டெழினியை யடைந்து பாடி வாழ்த்தியது வரை ஒரு பகுதியும், எழினியின்கொடை நலம் ஒரு பகுதியுமென இரு பகுதிகள் உண்டு. இரண்டும் கிணைவன் கூற்றுக்களே யாம். முதற்பகுதியின் தொடக்கத்தே எழினியை எடுத்துரைக்கும் கிணைவன், அரசியல் நடாத்தும் உயர்குடியிற் பிறந்தவன் எழினியென்றற்கு மதியேர்... எழினி என்றான், எழினியின் நெடுமனை முற்றம் சென்றது பின்பனிக் காலத்துத் தேய்மதிப்பக்கத்து விடியற்கால மென்பது விளங்க, பாசலை நிலவின் பனிபடு விடியல் என்றான். வினைமேற் சென்ற தலைவர் வினைமுடித்து வந்து மனைக்கண் உறையும் போதாகலின் அப்போதில் வினைமுடித்த மார்பினை யெடுத்தோதிப்புகழும் கருத்தால், வினைபுரிந்த செயலை, கொடா வுருகெழு மன்னர்...வாழிய பெரிதெனஎடுத்தோதி வாழ்த்தினான்.எழினி,விடியற்போதில் வந்துதன்வினை வென்றி கூறி வாழ்த்திய கினணவனுக்கு உரியதொரு புத்தாடை தந்து உடுப்பித்து, நாட்பட்ட தேறலைப் பொன் வள்ளத்திற் பெய்து தந்தானாக அதனைப் பாராட்டி, ஊருண்...நல்கியோனே என்றான். கொடுப்பவன் கொடைநலம் ஏற்போனது ஊண் முறையும் கோண்முறையும் அறிந்து செய்வதென்பது கொடைக்கடன் இறுக்கும் குடிப்பிறந்தார்க்கே இனிது அமைவதாகலின்,
* M. EP. R. for 906 Para. 34. + Madras Museum Plates of Jatila varaman(8) R. R. No. 7 of 1906. |