பக்கம் எண் :

435

     

“ஊண்முறை  யீத்த  லன்றியும்  கோண்முறை  விருந்திறை  நல்கி யோனே”
எனப்பாராட்டி, அவன் முன்னோர் வேற்று நாட்டினின்றும் கரும்பு கொணர்ந்த
வரலாற்றைக்  குறி்த்து,  “அந்தரத்து அரும்பெற லமிழ்தமன்ன கரும்பிவண்
தந்தோர் பெரும் பிறங்கடையே” என்று புகழ்ந்தோதினான்.

---

393. சோழன் குளமுற்றத்துக் துஞ்சிய கிள்ளிவளவன்

     குறுந்தொகையிற் காணப்படும் “கொங்குதேர்வாழ்க்கை” என்ற பாட்டைப்
பாடிய   இறையனாரின்   வேறுபடுத்த  இப்  பாட்டைப்  பாடிய  சான்றோர்
நல்லிறையனா  ரெனப்படுகின்றார்.  இவர்  பாடியனவாக  வேறு பாட்டுக்கள்
இல்லை.    இப்பாட்டும்    கிணைப்பொருநன்     ஒருவன்    வறுமையாக
பெருவாட்டமுற்றுச்  சோழன்  குளமுற்றத்துத்  துஞ்சிய   கிள்ளிவளவனைப்
பாடிப்பரிசில் கேட்குங் கூற்றாக அமைந்துள்ளது. இதன்கண் கிணைப்பொருதன்
ஒருவன் வறுமை மிகுந்து தன்னைப் புரப்போர் எங்கேனும் உளரோ எனத்தேடி
ஒருவருங் கிடைக்காமையால் வருந்தித் கிள்ளிவளவனையடைந்து நிகழ்ந்தது
கூறி,  “அண்ணலே,  நின்  நல்லிசை நினைந்து நின்பால் வந்துள்ளேன்: என்
சுற்றம்  உணவு கொண்டு பன்னாட்கள் ஆகின்றன. நிணம் விரவிய சோறும்,
பகன்றை மலர்போன்ற மெல்லிய ஆடையுந்தந்து எம்மை ஆதரித்தல்வேண்டும்.
யாங்கள் நின்னுடைய திருவடியைப் பரவி வாய்வாள்வளவன் பன்னாள் வாழ்க
என வாழ்த்திப் பாடுவோம் என்று கூறியுள்ளான்.

 பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை
குறுநெடுந் துணையொடு கூர்மை வீதலிற்
குடிமுறை பாடி யொய்யென வருந்தி
அடனசை மறந்தவெங் குழிசி மலர்க்கும்
5கடனறி யாளர் பிறநாட்டின்மையின்
 வள்ளன் மையினெம் வரைவோர் யாரென
உள்ளிய வுள்ளமோ டுலைநசை துணையா
உலக மெல்லா மொருபாற் பட்டென
மலர்தா ரண்ணனி னல்லிசை யுள்ளி
10ஈர்ங்கை மறந்தவெ னிரும்பே ரொக்கல்
 கூர்ந்தவெவ் வம்விடக் கொழுநிணங் கிழிப்ப
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்ட மிடைநிறைந் தன்ன
வெண்ணிண மூரி யருள நாளுற
15ஈன்ற வரவி னாவுருக் கடுக்குமென்
 தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
போதுவிரி பகன்றைப்புதுமல ரன்ன
அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும்