| | கேடின்றுநல்குமதி பெரும மாசில் | 20 | மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி | | ஆடுமக ளொல்க லொப்ப வாடிக் கோடை யாயினுங் கோடே வொழுக்கத்துக் காவிரி புரக்கு நல்நாட்டுப் பொருந வாய்வாள் வளவன் வாழ்கெனப் | 25 | பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே. |
திணையுந் துறையு மவை. சோழன் னுளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நல்லிறையனார் பாடியது.
உரை: பதி முதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை - தொடக்க முதலே பழகி யறியாத துன்ப வாழ்க்கையில்;குறு நெடுந் துணையொடு கூர்மை வீதலின் - இளைய நெடிய துணையாகிய மனைவியுடனே மதிநுட்பமும் கெடுதலால்; குடிமுறை பாடி - குடிதோறும் முறையே சென்று பாடி;ஒய்யென வருந்தி - ஈவோரின்மையின் மிகவும் நைந்து வருந்தி; அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் - சோறு சமைத்தற்கண் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய மட்பானையை நிமிர்த்துச் கமைக்கச் செய்யும்; கடன் அறியாளர் பரவுக்கடனையறிந்தாளும் செல்வர்; பிற நாட்டின்மையின் - பிற எந்நாட்டினும் இலராதலால்; வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என - இரப்பார்க்கு இல்லென்னாது கொடுக்குந் தன்மையுடைமையால் எம்மை எற்று உதவுவோர் யாருளர் என்று; உள்ளிய உள்ளமொடு - நினைந்த நெஞ்சத்துடனே; உலைநசை துணையா - வருந்துதற் கேதுவான விருப்பம் துணையாக; உலக மெல்லாம் ஒருபாற் பட்டென - உலக வாழ்விற்குரிய வளங்களெல்லாம் ஒரிடத்தே யுண்டானாற்போல; மலர்தார் அண்ணல் நின் நல்லிசை உள்ளி - மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்த தலைவனாகிய நீ உள்ளாயென அறிந்து நின்னுடைய நல்ல புகழை நினைத்து; ஈர்ங்கை மறந்த என் இரும்பேரொக்கல் - உண்டு கையீரமாதலைத் துறந்து வருந்தும் கெடுமாறு; கொழுநிணம் கிழிப்ப - கொழுவிய வூனைத் துண்டாக்கி; கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த - கோடையிற் கொண்ட பருத்தியினின்று நீக்கிச் சுகிர்ந்த பஞ்சியானது நிறையத் திணித்த; மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன - பொதியாகிய பண்டம் மிடைந்து நிறைந்திரந்தாற்போல; வெண்ணிணமூரி அருளி - வெள்ளிய வூன்துண்டங்களைக் கொடுத்து உண்பித்து, நாளுற ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும் - ஈனுதற்குரிய பொழுது எய்த முட்டையீன்ற பாம்பினது நாவின் வடிவைப்போல; என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி - பழமை யுற்றுக் கிழிந்து பிளவு பட்ட என் பீறிய உடையைமுற்றவும்நீக்கி; |