| 394.சோழியவேனாதி திருக்குட்டுவன் திருக்குட்டுவன் சேரநாட்டின் பகுதியாகிய குட்டநாட்டு அரசர் குடியில் தோன்றியவன்: குட்டநாட்டு வேந்தரைக் குட்டுவர் என்பது வழக்கு சேரவேந்தர் பலர்செங்குட்டுவன், வேல்கெழுகுட்டுவன், சேரமான் குட்டுவன் கோதை எனத் தொகை நூல்களுட் காணப்படுகின்றனர். குட்டுவன் என்னும் அறியலாம். இவ்வகையால் இத்திருக்குட்டுவன் தன் குடிமுன்னோர் பெயரையே தனக்குச் சிறப்புப் பெயராகக் கொண்டவன் ன அறிகின்றோம். இவன் முன்னோர் சேரநாட்டு முடிவேந்தராய் விளங்கியிருந்தனர். குட்டுவர் குடவர் பொறையர் எனச் சேரவேந்தர் குடிவகை பலவுண்டு. ஒருகாலத்தே குட்டுவர் குடிவலி குன்றியொடுங்கிக் கிடக்கையில் அதன்கண் இத்திருக்குட்டுவன் தோன்றித் தன் வன்மையாலும் வள்ளன்மையாலும் முடிவேந்தனாதற்குரிய சிறப்புற்றிருந்தான். இனிக் குட்டுவர் குடியில் தோன்றிய சேரமான் குட்டுவன் கோதை யென்பான் முடிவேந்தனாயிருந்தமையின் இவன் ஒரு பகுதிக்குத் தலைவனாயிருந்திருக்கலாமென நினத்தற்கும் இடமுண்டு. திருக்குட்டுவன் தொடக்கத்தில் சோழ வேந்தன்பால் தானைத்தவைனாயிருந்து போர்க்செயல் மாண்பால் சோழிய ஏனாதி யென்றும் அவனால் மாராயந்தரப்பட்டான். இவனுடையவூர் பாலைக்காடு நாட்டிலுள்ள வெண்குடையென்ற வூராகும். இப்போது அது வெங்கொடியென வழங்கும் சீறூராகவுளது. வெண்குடையென்னும் ஊரில் திருக்குட்டுவன் வழிவந்த குடும்பமொன்றுளது. அவர்கள் தங்களைக் குட்டுவன் வீட்டார் என்றே கூறிக்கொள்ளுகின்றனர். கோனாடு என்பது புதுக்கோட்டைப் பகுதியில் ஓடும் வெள்ளாற்றின் கரை சேர்ந்த நாடு. இதன் பரப்பு இருபத்து நாற்காத வட்டகையெனக் கல்வெட்டுக்கள் (P. S. Ins. 285) கூறுகின்றன. இது கல்வெட்டுக்களில் கோனாடான இரட்டபாடி கொண்ட சோழவள நாடு (P. S. Ins. 129) என்றும், கேரளாந்தக வளநாடான கோனா (P. S. Ins. 86) டென்றும், கடலைடயா திலங்கைகொண்ட சோழவளநாடு (P. S. Ins. 167) என்றும் வழங்கும் இக்கோனாடு, வடகோனாடு, (P. S. Ins. 286) தென்கோனாடு, (P. S. Ins. 221) கீழ்கோனா (P. S. Ins. 198) டென்றும் மூவகைப்படடும். குமரனாருடைய எறிச்சிலூர்கீழ்க்கோனாட்டில் உள்ளது. கீழ்கோனாடு இளங்கோனா (P. S. Ins. 728) டென்றும் வழங்கும்; இந்நாடு இப்போது தஞ்சைசில்லாவிலுள்ள அறந்தாங்கித்தாலுகாவின் மேலைப் பகுதியாக இருக்கிறது. இதன் இயல்புகளை இவ்வுரைகாரர் எழுதிய மதுரைக்குமரனார் என்ற நூலிற் பரக்கக்காணக். ஒருகால் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் அவனைக் காணச் சென்றார். திருக்குட்டுவன் காலத்தில் அப்பகுதியெல்லாம் தமிழ்நாடாகவேயிருந்தமை நினைவுகூரக் தக்கது. அவன் குமரானாரை வரவேற்று வேண்டுவன நல்கி இனிதிருக்கச் செய்தான். இருக்கையில் ஒருநாள் தாம் விடைபெற வேண்டியிருக்கும் குறிப்பை அவர் அவனுக்குத் தெரிவித்தார். இவன் போர் பல செய்து வென்றியொடு விங்கிய வெஞ்சின யானையொன்றை ஒப்பனை செய்து நிரம்பப்பொன்னும் பொருளும் உடன்வரக் குமரனார்க்குப் பரிசில் அளித்தான். யானையின் பெருமாண்ிபு கண்ட குமரனார் அதனை யணுகற் கஞ்சி அதனைத் திருப்பி விட்டார். தான் |