பக்கம் எண் :

441

     
டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்
துன்னரும் பரிசி றருமென
என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே.

     திணையுந் துறையு மவை. கடைநிலையாயின வெல்லாம் பாடாண்டிணை.
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சி லூர் மாடலன்
மதுரைக் குமரனார் பாடியது.


     உரை: சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் - விறபயிற்சி யால்
உயர்ந்தகன்ற சந்தனம்  பூசப்ட்ட  மார்பினையுடைய;  ஒலிகதிர்க் கழனி
வெண்குடை கிழவோர் - தழைத்த கதிர்கள் பொருந்திய கழனிகள் சூழ்ந்த
வெண்குடையென்னும் ஊர்க்குரியவனான; வலிதுஞ்ச தடக்கை வாய்வாள்
குட்டுவன்- வலி பொருந்திய பெரிய கையையுடைய தப்பாத வானள யேந்தும்
திருக்குட்டுவன்; வள்ளியனாதல் வையகம் புகழினும் - வள்ளன்மையுடைய
னென்பதை உலகத்து நன்மக்கள் புகழ்ந்தோதினாலும்; உயர்மொழிப் புலவீர் -
உயர்ந்த கருத்தமைந்த சொற்களை வழங்கும் புலவர்களே; உள்ளல் ஓம்புமின்
- நினைத்தலைக் கைவிடுவீராக; யானும்-; இருள்நிலாக் கழிந்த பகல் செய்
வைகறை-இருட்போதும் நிலவுப்போதும் கிாந்த பகற்போதினைச் செய்தற்குத்
தோன்றிய விடியற்காலத்தே; ஒரு கண் மாக்கினண தெளிர்ப் ஒற்றி - ஒரு
கண்ணையுடைய பெரிய தடாரிப்பறை மெல்ல ஒலிக்கு மாற இசைத்து; பாட
இமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை -  ஒலி  முழங்குகின்ற  முரசினையும்
செய்யப்பட்ட  தேரினையுமுடைய  அவன்  தந்தையது;  வாடா  வஞ்சி
பாடினெனாக - வஞ்சித்துறைப் பாட்டொன்றைப் பாடினேனாக; அகமலி
யுவகையொடு - மனம்  நிறைந்த  உகையினால்;  அணுகல்  வேண்டி -
பிரிவின்றித் தன்பால் அன்பால் நெருங்கியுறைய வேண்டுமென விரும்பி;
கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின் - பகைவரைக் கொன்ற
பின்பும்   முன்புகொண்ட   சீற்றம்   குன்றாத   புலான்  மணங்கமழும்
கோட்டினையுடைய;   வெஞ்சின்  வேழம்    நல்கினன் -  வெவ்விய
சினத்தையுடைய யானையொன்றைத்  தந்தான்; அஞ்சி - அது  கண்டு
அச்சமுற்று; யான்  அது  பெயர்த்தனெனாக - யான் அவ் வேழத்தை
அவன் யால்  திருப்பி  விட்டேனாக; தான்  அது சிறிதென வுணர்ந்தமை
நாணி-அவன் தான் அது என்வரிசைக்குச் சிறிதென உணர்ந்தமை யெண்ணி
நாணமுற்று, பிறிதும் ஒருபெருங்களிறு நல்கியோன் - மேலும் வேறே ஒரு
பெரிய களிற்றை நல்கினான்; அதற்கொண்டு - அதனால்; இரும்பேரொக்கல்
பெரும்புலம் புறினும் - மிக்க பெரிய என சுற்றத்தார் வறுமையால்
பெருந்துன்பம் எய்தினாராயினும்; அவன் குன்றுகெழுநாட்டு - குன்றுகள்
பொருந்திய அவனுடைய நாட்டுக்கு;