பக்கம் எண் :

442

     

துன்னரும் பரிசில் தருமென - நெருங்குதற்கரிய பரிசிலை நல்குவானென்றும்
கருதி; என்றும் செல்லேன் - எப்போதும் செல்லுவேனல்லேன்; எ- று.


     மார்பின் அகன்றுயர்ந்த மாண்புக்கு ஏதுக்கூறுவரர், “சிலையுலாய்
நிமிர்ந்த   மார்பு”   என்றார்.   சாந்து  -   சந்தனம்.   வெண்குடை,
திருக்குட்டுவனுடைய தலைநகர். ஒருவன் வள்ளியோனாகிய வழி, அவன்
புகழ் உலகெங்கும் பரவுதல் ஒருதலையாதலின் “வள்ளியனாதல் வையகம்
புகழினும்” என்றார். உள்ளல் ஓம்புமின் ஒரு சொல்லா யியைத்து உள்ளன்மின்
எனவும் நின்றாங்கே கொண்ட உள்ளுதலை மறவாது போற்றுமின் எனவும்,
பொருள் கொள்க. முற்பக்கத் திருளும் பிற்பக்கத்து நிலவும் உடைய
இரவுப்போது புலருங் காலம், “இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை”
என்று கூறப்பட்டது. ஏனைத் தேர் போலாது மிக்க காவ்வலி யுடையதாக
அமைந்த தேர் பல உடையன் என்பார், “இயறேர்த் தந்தை” யென்றார்.
வாடாஞ்சி, வஞ்சித் துறைப்பாட்டுக்கு வெளிப்படை அணுகல்வேண்டி வேழம்
நல்கினன் என்றரைப்பினுமமைமயும், உணர்ந்தமை நாணி, உணர்ந்தமையான்
நாணியென விரிக்க. புலம்புறினும் செல்லேன் என இயையும். கிழவனான
குட்டுவன் வள்ளியனாதல், புகழினும் புலவீர் உள்ள லோம்புமின், யானும்,
ஒற்றி, பாடினேனாக, வேண்டி நல்கினன்; அஞ்சி, பெயர்த்தனெனாக, நாணி
களிறு நல்கினன்; அதற்கொண்டு புலம்புறினும், தருமென, நாட்டுக்குச்
செல்லேன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

     விளக்கம்: கிழவன் என்று உரிமையாக வுடையவன் என்பது பட
நின்றது. இக் கிழமை பெற்றவர் கிழான் என்றும் கிழாரென்றும் கூறப்படுவர்.
இதுவேந்தரால் நல்கப்படும் சிறப்பெனவும், இதனைப் பெறற்கண் அந்தணர்
முதல் அனைவரும் உரியரெனவும் உணர்தல் வேண்டும். உப்பூரிகுடி கிழான்
உருத்திரசன்மன் (இ,அ. உரை) என வருவதும், இடைக்காலத்தே எட்டி
சாத்தன ் என்பான்  இருஞ்சேர்நாட்டுக்  கூடற்குடி, ‘குளத்தூர், துழாயூர்,
இருப்பைக்குடி,   வெளியங்குடி,  ஆலங்குடி   என்ற   வூர்கட்குரியனாய்
இருப்பைக்குடி கிழான் என்று வேந்தனால் சிறப்பிக்கப் பெறற்ான் (A. R. No.
334 of 1929-30 and A.R. for 1936-7 p. 73-4) என வருவதும் போதிய
சான்று பகருகின்றன. திருக்குட்டுவன் செய்த சிறப்புக்கண்டு பெருமகிழ்வுற்ற
குமரனார் அவனைப் பழிப்பதுபோலப் புகழ்கின்றாராதலின்இ“குட்டுவன்
...புலவீர்” என்றும், “இரும்பேரொக்கல்...நாட்டே” யென்றும் கூறுகின்றார்.
என்றாராயினும் “இது  மறைமுகமாக  உயர்மொழிப்  புலவர்  ஒருங்கு
திரண்டுவந்து தங்கள்  உயர்மொழியால் இக்  குட்டுவனது  புகழுடம்பை
உயர்மொழிப்  புலமைச்  செய்யுளால்  உருப்படுத்தி  நிலை நிறுவுதல்
வேண்டுமெனப் பணிக்கும் தமிழ்ப்பணி” (மது. கும. பக்க. 118) என்பது
கருத்தெனக் கொள்க. துன்னரும் பரிசில் என்னும் தொடர், “நம்போல்வார்
பெறுதற்கரிய பெரும் பரிசில்” என்றும் பொருள்படமாறு அமைந்திருப்பது
குறிக்கத்தக்கது.