| இப் பொருநனும் வாழவேண்டுமென நயந்து பேணுக எனத் தன் மனைவியைப் பணித்தா னென்பார், தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டியிவனை யென்போற் போற்றென் றோனே என்றான். நான்காவதன்கண் இரண்டாவது வந்து மயங்கிற்று; அறிவுடையந்தணவைளைக் காட்டென்றானோ (கலி. 72) என்றாற்போல, அவனிருந்த என் நெஞ்சில் பிறர் இருக்க இடத் தந்திலேன் என்பான், அவன் மறவலேனே என்றதனோடமையாது பிறருள்ளலேனே என்று வற்புறுத்தினான். ஏரி, குளம், தாள் என்பன விண்மீன் வகை. இவற்றின் தோற்றம் நாட்டிற்குக் கேடு தரும் என்பது பண்டையோர் கருத்து. கருனை, பொரிக்கறி. கொடுத்தறக்ண் உள்ளது இல்லது நோக்காது விளைவு ஒன்றோ வெள்ளம்கொள்க. எனக் கொடுத்தலிலே யமைந்தது அவனது தாள்; அது வாழ்க என முடிக்க. இது கொடைப் பொருள் இயல்பு நோக்காத கொடைமடம். அரியலாகும், கூப்பெயர்க்கும், புள்ளிரியும் புலனணியும் பிடவூர், சாத்தன் கிணையேம் பெரும, வருந்தி, தோன்றி, இசைத்தலின் எற்கண்டு, நில்லானாய், கூறானாய், அருளுவானாய், வேண்டி, உரைத்ததன்றி, நல்கி, காட்டி, போற்றென்றான்; அதற்கொண்டு, மறவலேன்; உள்ளலேன் தோன்றினும், புகையினும், மாந்தி, கொள்கென, அறியாது அவன்தான் அமைந்தன்று, வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: சோழநாட்டுப்பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் கண்ட தாம் பெற்ற சிறப்பை மதுரை நக்கீர் ஒரு கினணப் பொருநன் கூற்றில்வைத்து இப் பாட்டாற் கூறுகின்றார. கிணைவன் இதன்கண் முதல் இருபது அடிகளால் பிடவூரின் நலத்தைக் கூறி, தொடக்கத்தில் தான் சாத்தனைக் கண்டதும் அவன் சிறப்புச் செய்ததும், விரியக் கூறுகின்றான். பிடவூர் நன்செய் வளஞ் சிறந்த தாதலால், அவ்வூரிடத்து உழவர் வயலுழுத பகடுகளை வன்புலத்தில் மேயவிடுத்து, முயற்கறியும், வாளைமீன் கறியும் பழஞ்சோற்றோடு உண்டு. பூச்சூடி, புள்ளோப்பி அரியல் உண்டு மகிழ்வர்; ஒருபால் கானக்கோழியும் நீர்க்கோழியும் கூவாநிற்கும்; வேய்போலும் தோளும்மயில்போலும்சாயலுமுடைய உழவர் மகளிர் கிளிகடிகுவராயின், அவரோசைகேட்டு அள்ளற் புட்களாகிய நாரை முதலியன வெருவியோடும்; இப் பிடவூர் உறையூருக்குக் கிழக்கில் உள்ளதென்னக் கருதும் நக்கீரர் உறையூர்க் குரிய தித்தன் சிறப்பையும் உடன்கூற விழைந்து பல நல்ல...தித்தன் என்று கூறுகின்றார். காவிரிப்பூம்பட்டினம் தோன்றிச் சிறந்து விளங்குதற்கு முன்பே விளக்கம் பெற்ற தலைநகர் உறையூர்: ஊரெனப்படுவது உறையூர் என்ற சிறப்புடையது. அதனை இவர் செல்லா நல்லிசை யுறந்தை என்று குறிக்கின்றார், பிறவிடத்தும். ஆரங்கண்ணியடுபோர்ச் சோழர், அறங்கெடா நல்லவை யுறந்தை (அகம். 93) எனவும், கடலந் தானைக் கைவண் சோழன், கெடலரு நல்லிசை யுறந்தை (அகம்:369) எனவும் கூறுவது காணலாம். கினணவன் சென்று சாத்தன் மனையை யடைந்து தன் கிணைப்பறையை இசைத்து நிற்பவும், உடனே பரிசில் நல்கக் கருதி நன்கலங்களைத ் தருவித்து அவற்குக் கொடுத்து, தன் பேரன்பினை அருஞ்செய லொன்றாற் புலப்படுத்தினா னென்பார், தன்மனை...என்றோனே என்றார். இச் செயலைச் கண்டு வியப்பு மிக்க பிற்காலச் சான்றோரொ ருவர், யாமாயின் எம்மில்லங் காட்டுதுந் தாமாயின், காணவே கற்பழியுமென்பார்போல் - நாணிப், புறங்கடை |