பக்கம் எண் :

448

     

வைத்தவர் சோறும் அதனால் மறந்திடுக செல்வர் தொடர்பு” (நாலடி. 293)
என்று இசைப்பாராயினர். முடிவில் பெருஞ்சாத்துனுடைய பேரன்பால்
பிணிப்புண்ட தமது உட்கோள் இதுவென்பாராய், “அவன் மறவலேனே...
புகையினும்” என்றார். இத்தகைய பெருவள்ளியோனை நினைக்குந்தோறும்
பேசுந்தோறும் சான்றோர் அவனை வாழ்த்துவது அவன்பால் அவர்க்
கிருக்கும் அன்பின் பயனாதலால், தமது உட்கோள் உரைத்ததனோடு
நில்லாது, “அவன் தாள் வாழ்க” என்றும் தாட்பயனை, “விளைவொன்றோ
வெள்ளங் கொள்கென.உள்ளதும் இல்லதும் அறியா தாங்கமைந்தன்றால்”
என்றும் கூறினார்.இப்பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்திருக்கின்றன.
அப் பகுதியில் கினணவன் பெருஞ்சாத்தன் மனைக்கட் சென்றடைந்த
செய்த குறிக்கப்படுகிறது போலும்.

396. வாட்டாற்று எழினியாதன்

     வாட்டாறு  என்று  பெயர்    தங்கிய    ஊர்கள்   கோழநாட்டிலும்
தென்பாண்டி  நாட்டிலும்   உள்ளன.   ஒன்று  சோழநாட்டுத்   தஞ்சை
சில்லாவில்பட்டுக்கோட்டைத் தாலுகாவில் உளது.  வாட்டாற்றுக்கோட்டை
வாட்டாத்திக் கோட்டையென இப்போது மருவி வழங்குகிறது. ஒர காலத்தில்
இது தன்னைத்  தலைமை  ஆகக்கொண்டு  சூழவுள்ள வூர்கட்கு  நாடாக
விளங்கிற்று. அப்போது இதன்பெயர் வாட்டாற்று நாடென்பதாம். இதன்கண்
திருச்சிற்றேமம் என்ற சீரூர் இருந்தது. இப்போது அதற்குத் திருச்சிற்றம்பலம்
என்று பெயர். இங்குள்ள சிவரெுமானைத் திருஞான சம்பந்தர்  இனிய
திருப்பதிகம் பாடிப் பரவியுள்ளனர். திருச்சிற்றேமமாகிய திருச்சிற்றம்பலம்
என்று பெயர். இங்குள்ள சிவபெருமானைத்  திருஞான  சம்பந்தர்  இனிய
திருப்பதிகம் பாடிப் பரவியுள்ளனர். திருச்சிற்றேமமாகிய திருச்சிற்றம்பலத்துக்
கல்வெட்டொன்று, “இராசராச வளநாட்டுப் புன்றில் கூற்றத்துவாட்டாற்று
நாட்டுத்திருச்சிற்றேமம்” (A. R. No. 180 of 1926) என்று கூறுதல் காண்க.
மற்றொன்று தென் பாண்டிநாட்டில் இப்போது திருவாங்கூர் அரசில் மேலைக்
கடற்கரையில்  கல்குளம்   தாலுகாவில்   பறளியாற்றின்கரையில் உள்ள
திருவாட்டாறு.இதுவும் பழமையான நகரமாகும்.(K. P. P. Menon’s Hist. of
Kerala P. Vol. ii பக் 59). இப்பகுதி பண்டைநாளில் வேளிர்களின் ஆட்சியில்
இருந்திருக்கிறது. இவ்வாட்டாற்றருகே ஓடும் ஆறு தாமிரவருணியென்றும்
கூறப்படுகிறது. வாட்டாற்றின் கண் இருந்து சிறந்து புலவர் பாடும் புகழ்பெற்ற
எழினியாதன் எழினி யென்னும் வேளிர் தலைவற்கு மகனாவான். சங்கத்
தொகைநூற்கண் எழினியென்னும் பெயருடையார் பலர் இருந்துள்ளனர்.
அவருள், அதியமான் எழினியும், செல்லிக்கோமான் ஆதன் எழினியும்,
கண்ணன் எழினியும ் சிறந்து  காணப்படுகின்றனர்.  இவரின்  வேறாகத்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனோடு பொருது
தோற்றோடிய எழுவருள் ஒருவனாக ஓர் எழினியும் உள்ளனர், வாட்டாற்கு
ஆதனுக்குத் தந்தையாகிய எழினி, தலையாலங்கானத்துத் தோற்றோடிய
எழினியாவன். வாட்டாற்று எழினியாதன் அரசுகட்டிலேறிப் பாண்டியன்
நெடுஞ்செழியனுடன்   நட்புச்   செய்துகொண்டான்.  இவன்  சிறந்த
வேற்படையுடையவன். இவன்பால் இருந்த மறவர். தம் தலைவன் குறிப்பறிந்து
அவன் பணிக்கும் தொழிலை வென்றியுற முடித்தலில் பெருவேட்கையுடையர்.
அவர்கள் கள்ளுண்டு களித்தவழி அக் களிப்பினால் வெவ்விய சுரங்களைக்
கடந்து பகைவர் நிரைகளைக் கவர்ந்து வரும் இயல்பினரெனத்
தாயங்கண்ணனார் (அகம். 105) என்பார் கூறுகின்றார்.