பக்கம் எண் :

453

     

397. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     சோழன்   குளமுற்றத்துத்    துஞ்சிய   கிள்ளிவளவன்   அறியும்
ஆண்மையுமுடையார்   எத்திறந்தாராயினும்   அவரைவியந்துபாராட்டிச்
சிறப்பிக்கும் பெருந்தகை யென்பது உலகறிந்த செய்தி. தொகைநூல்களுட்
காணப்படும் சான்றோர்களிற் பலர் இவனைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர்.
இவனை   இப்  பாட்டாற்   சிறப்பிக்கும்   சான்றோர்   எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனாராவர்.  இவரது  எருக்காட்டூர்  சோழநாட்டுத்   தஞ்சை
சில்லாவில்  நன்னிலந்  தாலூகாவில்  உளது.  குளிக்கரை புகை வண்டி
நிலையத்துக்கு மேற்கில் இவ்வூர் இன்றும் இருந்துவருகிறது. அதனைச் சார
இருந்த மணற் குன்று என்னுமூரை எருக்காட்டூர்ச் சேரிக்குப் பிடாகையான
எனத் திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள் (A. R. No. 32 and 38 of 1906)
கூறுகின்றன. தாயன் என்பார்க்கு மகனாதலால் இவர் தாயங்கண்ணனா
ரெனவும், தாயங்கண்ணனாரென்ற பெயருடையார் பலர் இருத்தலின், அவரின்
வேறுபடுத்த இவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனா ரெனவும், சான்றோரால்
குறிக்கப் படுவாராயினர். தாயங்கண்ணனார், தாயன் என்பார்க்கு மகனாவர்.
தாயனார் எருக்காட்டூரில் வாழ்ந்தவர். கண்ணனார் எருக்காட்டூரினராதலால்.
எருக்காட்டூரித் தாயங்கண்ணனார் எனப்படுவாராயினர். பொருள்வயிற் பிரியக்
கருதும் தலைமகனைச் செலவழுங்குவிக்கும் கருத்தினளான தோழி,தலைமகள்
நலத்தை, “அணங்கென வுருத்த நோக்கின் ஐயென, நுணங்கிய நுசுப்பின்
நுண்கேழ் மாமைப், பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய. நன்னிறத் தெழுந்த
கணங்கணி வன முலைச். சுரும்பார் கூந்தல் பெருந்தோள் இவள்” என
வனப்பை வகைப்படுத் தோதி. அது கேட்டுத் தலைமகள் நெஞ்சுநெகிழ்வ
துணர்ந்து, “கொய்தழைத் தளிரேரன்ன தாங்கரு மதுகையள்,மெல்லியலிளையள்
நனி பேரன்பினள்,  செல்வே  மென்னு   நும்மெதிர்,   ஒல்வே   மென்னு
மொண்மையோ விலளே” (அகம். 319) என்பதனால் இவரது புலமைநலம்
மிகச்சிறந்து  விளங்குவதை   யறிகின்றோம்.   மேலும்   இவர்,  யவனர்
பொன்கொணர்ந்து தந்து மிளகுகொண்டு சென்றன ரென்பார், “சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க,யவனர் தந்த வினைமாணன்கலம்,
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” (அகம். 149) என்று கூறுகின்றார்.
இம் முசிறி நகரை ஒருகால் பாண்டியனொருவன் வளைத்துக்கொண்டு
அரும்போருடற்றி வென்று அங்கிருந்த பொற்படிம மொன்றைக் கவர்ந்து
வந்தான் என்பதையும் அவனுடைய கூடல்நகர்க்கு மேற்கிலுள்ள பரங்குன்றத்து
விழாவையும் அங்குள்ள சுனையிடத்து மலரும் நீல மலரையும் “வளங்கெழு
முசிறி  யார்ப்பெழ  வளைஇ,   அருஞ்சமங்   கடந்து   படிமம் வவ்விய,
நெடுநல்யானை யடுபார்ச் செழியன், கொடி நுடங்கு மறுகிற் கூடற்குடாஅது.
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, ஓடியா விழவின் நெடியோன்
குன்றத்து, வண்டுபடி நீடிய  குண்டுசுனை நீலம்”  (அகம். 149) எனச்
சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் ஒருகால் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனைக் தோன்றிய அவரது புலமை நலத்தை வியந்து நெடிய
சூட்டிறைச்சியும், மணங்கமழும் கட்டெளிவும் உயரிய ஆடையும் அரிய
கலங்கள் பலவும் நல்கிப் பெருஞ்சிறப்புச் செய்தான் வளவன். அவனது
வள்ளன்மைகண்டு பெருவியப்புற்ற தாயங் கண்ணனார், இவ்வுலகில்
எத்துணை வறுமைத்துன்பம் உண்டாயினும் எங்கெழிலென ஞாயிறு
எமக்கென இருப்பேம் என்ற கருத்துப்பட இப்பாட்டைக் கிணைப்
பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடினார். இதன்கண்