பக்கம் எண் :

454

     

கிணைப்பொருநன் சென்று விடியற் காலையில் துயிலெடை நிலை பாடியதும்,
அதுகேட்டுச் சோழன் கிள்ளிவளவன் சூட்டிறைச்சியும் தேறலும் பிறவும் நல்கிச்
சிறப்பித்துதும், ஊழி பெயரினும், ஞாயிறு தென்றிசைச் செல்லினும் வளவன்
தாணிழல் வாழ்வு பெற்ற தான், சிறிதும் அஞ்சாத ஆதரவு பெற்றதும் அழகுறக்
குறிக்கின்றான்.

 வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரற்றொற்றினவே
பொய்கையும் போதுகண் விழித்தன பையச்
சுடருஞ் சுருங்கின் றொளியே மாடெழுந்
 5. திரங்குகுரன் முரசமொடு வலம்புரி யார்ப்ப
 இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
எஃகிரு ளகற்று மேமப் பாசறை
வைகறை யரவங் கேளியர் பலகோட்
செய்தார் மார்ப வெழுமதி துயிலெனத்
 10.தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
 நெடுங்கடைத் தோன்றி யேனே யதுநயந்
துள்ளி வந்த பரிசில னிவனென
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கல னிறைந்த மணநாறு தேறல்
 15.பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
 மாரி யன்ன வண்மையிற் சொரிந்து
வேனி லன்னவென் வெப்புநீங்க
அருங்கல நல்கி யோனே யென்றும்
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
 20.அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த
 தீயொடு வளிங்கு நாடன் வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
எறிதிரைப் பெருங்கட லிறுதிக்கட் செலினும்
தெறுகதிர்க் கனலி தென்றிசைத் தோன்றினும்
 25.என்னென் றஞ்சலம் யாமே வென்வேல்
 அருஞ்சமங் கடக்கு மாற்றலவன்
திருந்துகழ னோன்றாட் டண்ணிழ லேமே.

     திணை: அது; துறை: பரிசில்விடை; கடைநிலை விடையுமாம். சோழன்
குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
பாடியது.


     உரை: வெள்ளியும் இருவிசும் பேர்தரும் - வெள்ளியாகிய மீனும்
வானத்தில் எழுவதாயிற்று; புள்ளும் உயர்சினைக் குடம்பைக் குரல்தோற்றின
- பறவைகளும் மரத்தின் உயர்ந்த கிளையில் கட்டிய