பக்கம் எண் :

455

     

கூட்டிலிருந்து தம்முடைய ஓசையைச் செய்ய லுற்றன; பொய்கையும் போதுகண்
விழித்தன - பொய்கைகளில் குவிந்திருந்த தாமரைகள் கண்விழிப்பதுபோல்
இதழ் விரியலுற்றன; பையச் சுடரும் ஒளி சுருங்கின்று - மெல்லெனத்
திங்களாகிய சுடரும் தன் ஒ ளிாகிய நிலவு குறையத் தொடங்கிற்று; பாடு
எழுந்து - ஒலித்தற்கு முற்பட்டு; இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப -
முழங்குதற்குரிய முரசங்களும் வலம்புரிச் சங்கங்களும் முழங்குதலைச் செய்ய;
இரவுப் புறங்கண்ட காலை தோன்றி - இரவுப்புறமாகிய கடையாமங் கழிந்த
காலைப்போது தோன்றி; எஃகு இருள் அகற்றும் - எஞ்சிநின்ற குறையிருளைப்
போக்கும்; ஏமப் பாசறை - காவலையுடைய பாசறைக்கண்; வைகறை யரவம்
கேளியர் - வைகறைப் போதில் எழுகின்ற ஒலிகளைக் கேட்பாயாக; பலகோள்
செய்தார் மார்ப - பலவகைத் தொழிற்பாடமையத் தொடுக்கப்பட்ட
மாலையணிந்த மார்பைபுடைய வேந்தே; துயில் எழுமதி - படுக்கையினின்
றெழுவாயாக; என - என்று; தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி -
தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப்பறை யொலிக்குமாறு கொட்டி;
நெடுங்கடைத் தோன்றியேன் - நெடிய முற்றத்தின்கட் சென்று நின்றேனாக;
அது நயந்து - என் வரவை விரும்பி; இவன் உள்ளிவந்த பரிசிலன் என -
இவன் நம்மை மறவாது நினைந்த வந்த பரிசிலனாவான் என்று சொல்லி;
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு - நெய் மிகச் சொரிந்து பொரித்த
தாளிதத்தையுடைய நெடிய சூட்டிறைச்சியும்; மணிக்கலன் நிறைந்த மணன்
நாறு தேறல் - மணியிழைத்த வள்ளத்தில் நிறையப் பெய்த மணம் கமழும்
கட்டெளிவும்; பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு - பாம்பினது
உரியாகிய தோல்போன்ற வெள்ளிய பூவேலை செய்யப்பட்ட ஆடையும்; மாரி
யன்ன வண்மையின் சொரிந்து - மழை போன்ற வண்மையுடையனாதற்கேற்ப
வழங்கி; வேனில் அன்ன என்வெப்பு நீங்க - வேனிற்காலத்து வெம்மைபோல
வறுமையால் எனக்குண்டாகிய துன்பமாகிய வெம்மை நீங்குமாறு; அருங்கலம்
நல்கியோன் - பெறற்கரிய கலன்கள் பலவும் பொடுத்தருளினான்; என்றும் -
எப்போதும்; செறுவிற் பூத்த சேயிதழ்த்தாமரை - வயலிடையே பூத்த சிவந்த
இதழ்களையுடைய தாமரை; அறம்புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன் -
அறத்தை விரும்பி வளர்த்த தீப்போல விளங்கும் நாட்டையுடையவனும்; வாய்
வாள் - தப்பாத வாட்படை கொண்டு சென்று; வலம்படு தீவின் பொலம்பூண்
வளவன் - வென்று கொண்ட தவிடத்திற் பெற்ற பொன்னாலாகிய அணிகளை

யுடையவனுமாகிய;