பக்கம் எண் :

459

     

ஆரத்தையும் தன் மேனியில் அணியப்பெற்றிருந்த அணிகலன்களையும்
தந்தருளினான். அவற்றைப் பெற்ற பொருநரும் பிறரும் அவன் புகழ்
நாடெங்கும் பரவுமாறு பாடிச்செல்வாராயினர். இப் பாட்டின் இடையே சில
அடிகள் சிதைந்துவிட்டன.

 மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர
வகைமா ணல்லில்.....
பொறிமயிர் வாரணர் பொழுதறிந் தியம்பப்
பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
 5.கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க
 இரவுப்புறம் பெற்ற வேம வைகறைப்
பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
வரிசையி னிறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகி னல்லது பகைவர்க்குப்
 10.புவியின் மடிந்த கல்லளை போலத்
 துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
மதியத் தன்னவென் னரிக்குரற் றடாரி
இரவுரை நெடுவா ரரிப்ப வட்டித்
துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய்
 15.தள்ளா நிலையை யாகிய ரெமக்கென
 என்வர வறீஇச்
சிறிதிற்குப் பெரிதுவந்து
விரும்பிய முகத்த னாகி என்னரைத்
துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப்
 20.புகைவிரிந் தன்ன பொங்குதுகி லுடீஇ
 அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை
நிழல்காண் டேற னிறைய வாக்கி
யானுண வருள லன்றியுந் தானுண்
மண்டைய கண்ட மான்வறைக் கருணை
 25. கொக்குகிர் நிமிர லொக்க லார
 வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு
புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம்
உரைசெல வருளியோனே
 30. பறையிசை யருவிப் பாயற் கோவே.

     திணை: அது. துறை: கடைநிலை. சேரமான் வஞ்சனைத்திருத் தாமனார்
பாடியது.


     உரை: மதி நிலாக் கரப்ப - திங்களின் நிலவொளி மறைய; வெள்ளி
ஏர் தர - வெள்ளியாகிய விண்மீன் எழுந்து விளங்க; வகைமாண் நல்லில் -
பலவகையாகக் கட்டப்பட்டு மாண்புற்ற நல்ல பெருமனை;....; பொறிமயிர்
வாரணம் பொழுதறிந்து