பக்கம் எண் :

461

     

கொக்கின் நகம் போனற் முறியாத நெல்லரிசிச் சோற்றையும்; ஒக்கல் ஆர -
என் சுற்றத்தார் உண்ண; வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் -
மலைபோன்ற மார்பிலணிந்த உலகமெலாம் விலைமதிக்கத் தக்க; விரவுமணி
ஒளிர்வரும் - பலமணிகள் விரவிக் கோக்கப்பட்டு ஒளி விளங்கும்; அரவு
உறழ் ஆரமொடு - பாம்பு போல் வளைந்து கிடக்கும் மாலையும்; புரைோன்
மேனிப் பூத்துகில் கலிங்கம் - உயர்ந்தோனாகிய அவன் மேனிக்கண் கிடந்து
விளங்கும் பூ வேலை செய்யப்பட்ட உடைகளை; உரைசெல அருளியோன் -
தன் புகழ் எங்கும் பரவ நல்கினான்; பறையிசை அரவிப் பாயல்கோ -
பறைபோல் முழங்கும் அருவிகளையுடைய பாயல் என்னும் மலைக்குரியவன்;
எ - று.


     வைகறையில், வஞ்சன் மூதூர்க்கண் தடாரி அரிப்ப வட்டித்து, என,
அறீஇ, உவந்து, முகத்தனாகி, நீக்கி, உடீஇ, வாக்கி, அருளலன்றியும் ஓக்கல்
ஆர, ஆரமொடு, பாயற்கோவாகிய அவன் அருளினான் எனக் கூட்டி
வினைமுடிவு செய்க. கரப்ப, ஏர்தர, இயம்ப, மலர, இயக்க, பெற்ற
ஏமவைகறையென இயையும். பெரும்பெயர் மூதூரென்றது, அவன் பெயரே
பெய்ய அஞ்சன் குன்று என்னும் நகர் போலும். குடகு நாட்டுக்
கல்வெட்டொன்று “அஞ்சனகிரி மாளிகை” (Coorg: Ins. Voli. No.10) என்று
ஒன்றைக்குறிக்கின்றது. சென்ற நூற்றாண்டு இறுதிகாறும் பாயல்நாடாகிய
வயனாடு (whynad Taluka) குடகுநாட்டோடே சேர்ந்திருந்ததென அந்நாட்டு
வரலாறு கூறகிறது. (Malabar Series - Whynad: P.5) இப்போதுள்ள நீலகிரி
சில்லாவும் வயனாட்டோடு சேர்ந்திருந்து கி.பி. 1887 இல் தான் பிரிந்தது. இது
நீலகிரியெனப் படுவதும் இடைக்காலக் கல்வெட்டு அஞ்சன கிரி யென்றும்
நோக்கின், இந்நீலகிரி ஒருகாலத்தில் சேரமான் வஞ்சனுக்கு உரியதாயிந்து.
பெரும்பெயர் மூதூர் எனச் சிறப்பிக்கப்பெற்றமை தெரிகிறது. தடாரிக்கு
அரிக்குரல், அதன் நெடிய வார்கள் அரித்தலால் உண்டாவது தோன்ற,
“நெடுவார் அரிப்ப” என்றார். தடாரியின் ஓசை. அதனை இயக்கும்
பொருநரது குறிப்பையுணர்த்தும் வகையில் எழுப்பப்படுமாகலின், “இரவுரை
நெடுவார் அரிப்ப வட்டித்து” என்றார். வட்டித்தல்-இசைத்தல்; “விசிப்புறுத்
தமைந்த புதுக்காழ்ப் போர்வை, யலகின்மாலையார்ப்ப வட்டித்து” (புறம். 399)
என வருதல் காண்க. சிறுகோல் கொண்டு அதன் தலை வட்டமிடச்
சுற்றியடித்தல் பற்றி “வட்டித்து” என்றார். வட்டமென்னும் பெயரடியாகப்
பிறந்த வினை. மதியம் வடிவுவமம், நார்நாராய்க் கிழிந்து வுடையென்பது
தோன்ற, “துரும்புபடு சிதா அர்” எனப்பட்டது. மண்டையைக் காணுந்தோறும்.
உணவின்மை தோன்றி வயிற்றுத் தீயை யெழுப்பி வெதுப்புதலின் “அழல்கான்
றன்ன மண்டை” யென்றார். அரும்பெறல் என்புழி அருமை இன்மை குறித்து
நின்றது; “அருங்கேடன்” (குறள். 210) என்றாற்போல, தேறலின் தெளிவைச்
சிறப்பிப்பது குறித்து, அது “நிழல் காண்தேறல்” எனப்பட்டது. சேரமான்
அணிந்திருந்த மணிமாலை உலகினரால் பெரிதும் மதித்துப் பாராட்டப்
படுவதொன்றாதலின், “வையகம் விளக்கும் விரவுமணியொளிர் வரும் ஆரம்”
என்றார். அருவிப் பாயல் என்றது பாயல் மலைக்கு வெளிப்படையாயிற்று.