| ஓங்குசினை மாவின் றீங்கனி நறும்புளி |
5. | மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை |
| செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகற் பாதிரி யூழ்முகை யவிழ்விடுத் தன்ன மெய்களைந் தினனொடு விரைஇ... மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல் |
10. | அழிகளிற் படுநற் களியட வைகிற் |
| பழஞ்சோ றயிலு முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக் கிள்ளி வளவ னுள்ளி யவற்படர்தும் செல்லேன் செல்லேன பிறர்முக நோக்கேன் |
15. | நெடுங்கழைத் தூண்டில் விடுமீ னொடுத்துக் |
| கிணைமக ளட்ட பாவற் புளிங்கூழ் பொழுதுமறுத் துண்ணு முண்டியே னழிவுகொண் டொருசிறை யிருந்தே னென்னே யினியே அறவ ரறவன் மறவர் மறவன் |
20. | மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன் |
| இசையிற் பொண்டா னசையமு துண்கென மீப்படர்ந் திறந்து வன்கோன் மண்ணி வள்பரிந்து கிடந்த வென் றெண்கண் மாக்கிணை விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை |
25. | உலகின் மாலை யார்ப்ப வட்டித்துக் |
| கடியு முணவென்னக் கடவுட்குந் தொடேன் கடுந்தே ரள்ளற் கசாவா நோன்சுவற் பகடே யத்தையான் வேண்டிவந் ததுவென ஒன்றியான் பெட்டா வளவை யன்றே |
30. | ஆன்று விட்டன னத்தை விசும்பின் |
| மீன்பூத் தன்ன வுருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள இழுமென விழிதரு மருவி வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவை. |