| யென்றதற்குக் குற்றியுண்டாய் என்றார். நல்ல மெய்யாதலாவது சொல்லும் சொல் ஒவ்வொன்றும் மெய்யாவது. என்றும் - நாடோறும். வாடுபசி - வாடுதற்குரியது மெய்யாதலின், மெய் வாடுதற்கேதுவாகிய பசி. அருந்துதற்கேற்ற காரணம் இதுவென்பார்வளவனது ஆற்றல்என்றும், நின்னுடைய ஆற்றல் எம்மனோரால் பழிக்கப் படும் குற்றமுடைய தென்பார், வளவனது ஆற்றலை, பழிதீராற்றல் என்றும், நின்னோடு வளவனுக்குள்ள ஒப்புமை கொலைத்தொழில் ஒன்றே யென்றதற்கு,நின்னோரன்னஎன்றும் கூறினார். ஆயின் என்பதற்கு, இனி நினக்கு வளவன்போல் உதவுவோர் யாவருளரென ஆராயுமிடத்து என்று உரைப்பினும் அமையும். நயன், என்றதற்கு நியாயம் என்பது பொருளாயின், தனக்கு வேண்டும் உணவு நல்கித் தான் செய்யும் தொழிலை எளிதாக்கி உதவுவோரைக் கொல்வது ஒருவருக்கு முறைமையன்று என்பது பற்றி நயனில் கூற்றம் என்றார் என்று கோடல்வேண்டும். ---
228. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கிள்ளிவளவன் குளமுற்றத்தில் துஞ்சியதறிந்து வருந்திய சான்றோருள் ஐயூர் முடவனாரும் ஒருவர். அவர் பெயரை ஐயூர் மூவனாரென்றும் சில ஏடுகள் கூறுகின்றன. பாண்டிநாட்டிற் காணப்படும் சிற்றையூர் பேரையூர் என்பனவற்றுள் இவரது ஐயூர் இன்னதெனத் தெரிந்திலது. இச்சான்றோர் பாண்டியன் கூடகாரத்துச் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடிச் சிறப்புப் பெற்றவர். இவர் ஒருகால் கிள்ளிவளவனைக் காண வந்தார். இடைவழியில் இவர்க்கு மாட்டாமை உண்டாக, தோன்றிக் கோன் என்பவன் ஊர்தி தந்து இவரை ஊக்கினான். பின்னர், கிள்ளி வளவனைக்கண்டு பாடி அவனால் சிறப்புச் செய்யப் பெற்றார். இவர்க்குக் கிள்ளிவளவனது பிரிவு பெருவருத்தத்தைச் செய்தது. அக்காலத்தே இறந்த மக்களை நிலத்திற் புதைக்குமிடத்து அவர்மேல் பெரிய தாழியைக் கவித்துப் புதைப்பது மரபு. கிள்ளிவளவனையும் தாழியிற் கவித்து வைத்தனர். அவர் மனக்கண்ணில் கிள்ளிவளவனுடைய பூதவுடம்பு புலனாகாது புகழுடம்பு புலனாயிற்று. தாழியாற் கவிப்பதாயின் அப்புகழுடம்பைத் தான் கவிக்க வேண்டுமேன எண்ணினார். அவ்வுடம்பு நிலவுலகு முழுதும் பரந்து வானளாவ உயர்ந்து தோன்றிற்று. அதற்கேற்ற தாழி வேண்டின், நிலவுலகைக் குயவன் ஆழியாகவும் மேருமலையை மண் திரளாகவும் கொண்டு பெரியதொரு தாழி செய்ய வேண்டும், என எண்ணினார். குயவனை நோக்கி இவ்வாறு ஒரு தாழி செய்ய இயலுமோ என்பார் போல இந்தப் பாட்டைப் பாடியுள்ளார்.
| கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே இருடிணிந் தன்ன குரூஉத்திரட் பரூஉப்புகை அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே | 5 | அளியை நீயே யாங்கா குவைகொல் | | நிலவரை சூட்டிய நீணெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன |
|