| 5 | கருதியங் கரூஉப்புனற் பொருகளத் தொழிய | | நாளு மானான் கடந்தட் டென்றுநின் வாடுபசி யருத்திய பழிதீ ராற்றல் நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண் வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி | 10 | இனையோற் கொண்டனை யாயின் | | இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே. |
திணையும் துறைவு மவை. அவனை ஆவடுதுரை மாசாத்தனார் பாடியது.
உரை: நயனில் கூற்றம் - ஈரமில்லாத கூற்றமே; நனிபேதை - மிகவும் அறிவுடையையல்லை; விரகு இன்மையின் - நினக்குப் போவதொரு விரகில்லாதமையினால்; வித்து அட்டு உண்டனை - மேல்விளைந்து பயன்படும் விதையைக் குற்றியுண்டாய்;நன்வாயாகுதல் இன்னும் காண்குவை - ஆயின் நினக்கு இவ்வாறு சொல்லிய வார்த்தை நல்ல மெய்யாதல் இன்னமும் காண்பை; ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும் - ஒளிவிளங்கிய வாட்போரை வல்ல வீரரும் யானையும் குதிரையும்; குருதியங் குரூஉப் புனல் பொருகளத் தொழிய - உதிரமாகிய நிறமுடைய அழகிய நீர் மிக்க போர்க்களத்தின்கண் மாய; நாளும் ஆனான் கடந்து அட்டு - நாடோறும் அமையானாய் எதிர்நின்று கொன்று; என்றும் நின் வாடுபசி அருத்திய பழிதீர் ஆற்றல் - நாடோறும் நினது மெய் வாடுதற் கேதுவாகிய பசி தீர்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய கொலைத் தொழிலுக்கு; நின்னே ரன்ன - நின்னையொத்த; பொன் இயல் பெரும்பூண் வளவனென்னும் - பொன்னானியன்ற பேரணிகலத்தையுடைய வளவனென்று சொல்லப்படும்; வண்டு மூசு கண்ணி இனையோன் கொண்டனை யாயின் - வண்டுகள் மொய்க்கப்படுங் கண்ணியையுடைய இத் தன்மையினை யுடையோனை நீ கொண்டாயாயின்; இனி நின்பசி தீர்ப்போர் யார் - இனி நின் பசியைக் கெடுப்போர் யார், சொல்லுவாயாக; எ - று.
கூற்றமே, இத்தன்மையோனைக் கொண்டாயாயின், நின் பசியைத் தீர்ப்போர் இனி யார்? விரகின்மையின் வித்தட்டுண்டனை; நன்வாயாகுதல் இன்னும் காண்குவை எனக் கூட்டி வினைமுடிவு செய்க நயன் - நியாயமுமாம்.
விளக்கம்: நனிபேதையே என்ற துணிவை வற்புறுத்தற்கு வித்தட்டுண்டனை என்றார். வேறே செய்தற்குரியவற்றை யெண்ணும் அறிவில்லையாயினை யென்பால், விரகின்மையின் என்று காட்டினார். வித்து, மேல்விளைந்து பயன் படுவதாகலின், மேல் விளைந்து பயன்படும் விதை யெனவே உரை கூறப்பட்டது. வித்தென்றமையின், அட்டுண்டனை |