|       | தானே கண் கிழிந்து போயிற்று;         வெண்குடை கால் துணிந்து வீழ்ந்தது;          குதிரைகள் செல்லும் கதியின்றிக் கிடந்தன. இத் தீநிமித்தங்கள் வேந்தன்          முடிவை  வலியுறுத்தின. இவற்றால்   மனம்  அழுங்கிய  ஆசிரியர்                  கூடலூர்கிழார்   இப்பாட்டின்கண்  இந் நிகழ்ச்சிகளை  எடுத்தோதி                  வருந்துகின்றார்.
              கூடலூர் கிழாரது கூடலூர் பொறைநாட்டுப் பாலைக்காட்டு வட்டத்து                  (Palghat Tq) நடுவட்டம் என்ற நாட்டிலுள்ள தோரூர். இவர் இனிய          பாட்டுக்கள் பாடவல்லவர். இவராற் பண்டை மரந்தை நகரம் சிறப்புறக்          குறிக்கப்படுகிறது. கணவனொடு கூடிக் கடிமனைக்கண் வாழும் தலைமகள்,          கணவற்குப் புளிப்பாகர் சமைத்து உண்பிக்கும் திறத்தை,நினைக்குந்தோறும்         இன்பம்  ஊறுமாறு  இவர்  பாடிய  பாட்டுக்   குறுந்தொகைக்கண்                  காணப்படுகிறது. சேரமான்  யானைக்   கட்சேஎய்  மாந்தரஞ்சேரல்                  இரும்பொறை விரும்பியது கொண்டு இவர் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய          ஐங்குறுநூற்றைத் தொகுத்தார். இவரைப் புலத்துறை முற்றிய கூடலூர்          கிழார் என ஐங்குறுநூற்றின் ஈற்றுக் குறிப்புக் கூறுவது இவரது சிறப்பை          இனிதெடுத்துக் காட்டுகிறது.
  |   | ஆடிய             லழற்குட்டத்             தாரிரு ளரையிரவின்             முடப்பனையத்து வேர்முதலாக்             கடைக்குளத்துக் கயங்காய்ப் |  | 5 | பங்குனியுய             ரழுவத்துத் |  |   | தலைநாண்மீ             னிலைதிரிய             நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்             தொன்னாண்மீன் றுறைபடியப்             பாசிச் செல்லா தூசி முன்னா |  |              10 | தளக்கர்த்திணை             விளக்காகக் |  |   | கனையெரி             பரப்பக் காலெதிர்பு பொங்கி             ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே             அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்             பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன் |  |              15 | நோயில             னாயி னன்றுமற் றில்லென |  |   | அழிந்த             நெஞ்ச மடியுளம் பரப்ப             அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே             மைந்துடை யானை கைவைத் துறங்கவும்             திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும் |  |              20 | காவல்             வெண்குடை கால்பரிந் துலறவும் |  |   | காலியற்             கலிமாக் கதியின்றி வைகவும்             மேலோ ருலக மெய்தின னாகலின் |  
  |