| துணிந்து உலறவும்; காலியல் கலிமா கதியின்றி வைகவும் - காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக்கிடக்கவும்; மேலோருலகம் எய்தினன் - இப்படிக்கிடக்கத் தேவருலகத்தை யடைந்தான்; ஆகலின்-ஆகையாலே; ஒண்டொடி மகளிர்க்கு உறுதுணையாகி - ஒன்றிய வளையையுடைய மகளிர்க்குமேவப்பட்ட துணையாகி; தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ -தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான் கொல்லோ; பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் - பகைவரைப்பிணித்துக் கொல்லும் வலியையும்; நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை - நச்சியோர்க்கு அளந்து கொடுத்தலறியாத வண்மையையுமுடைய; மணிவரை யன்ன மா அ யோன் -நீல மலைபோலும் மாயோன்; எ - று.
மன்னும் தில்லும் அசை. கயத்துக் குளக்கடை யென்க. நற்றிசை யாகிய கிழக்கும் வடக்கும் செல்லாது தீத்திசையாகிய தெற்கும் மேற்குமாகிய இரண்டனுள் ஒருதிசைக்கண் வீழ்ந்ததென்று ஆம்;அன்றி, வடக்கும் கிழக்கும் செல்லாதெனவே, வடகிழக்கே வீழ்ந்த தென்றுமாம். படவென்றல், இன்னாமையிற்கைவைத்துறங்கவும், கண் கிழிந்துருளவும்,கால் பரிந்துலறவும், கதியின்றி வைகவும் எனக் தகுதி பற்றிக் கூறப்பட்டன.
மாயோன், மகளிர்க்குத் துணையாகி, தன்றுணையாயம் மறந்தனனோ, இல்லையோ; யாம் மறவா நிலைமையமாயினம் என இரங்கிக் கூறியவாறு.
அஞ்சினம் எழுநாள் வந்தன்றின்றென என்றும் பாடம்.
விளக்கம்: அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். அக் கினியை அதிதேவதையாக வுடைமையின், கார்த்திகைக்கு அழலென்பது பெயராயிற்று என்ப.ஆட்டினை,வடநூலார்மேடராசியென்பர். ஆடு முதல் மீன் ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் அசுவனி முதல் இரேவதி ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால் நாள்ஆடாகியமேடத்துக்குரியவாதலின்,கார்திகையின்முதற்காலை ஆடியல் அழற் குட்டம் என்றார்.அனுடமென்பதுஆறு மீன்களின் தொகுதி; அது வளைந்த பனைமரம்போ லமைதலின், முடப் பனையம் எனப்பட்டது.வேர்முதலா -அடியின் வெள்ளி; அஃதாவதுமுதல் நாண்மீன்.உயரழுவம் - முதற ் பதினைந்துநாள்.தலைநாண்மீன் உத்தரநாள். நிலை நாண் மீன் - எட்டாம் மீன்; உச்சி மீனுக்குமுன் எட்டாவது மீன் அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு; உச்சி மீனுக் கெட்டாம் மீன் உதய மீன்என்ப.தொன்னாண்மீன்- எட்டாம் மீனாகிய மிருகசீரிடம். பாசி - கிழக்குத் திசை. ஊசி - வடக்குத் திசை. பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின், இராச பீடையென்பர்; ஆடுகயல் தேள் தனுச்சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசழிவாம் என்பர். கயமாகிய குளம் என்றது கயக்குளம் என்றார் அஃதாவது புனர்பூசம்; இது குளம்போலும் வடிவுடையது. இதுபற்றியே, பிங்கலந்தையும், அதிதி நாள் |