| கழையா வணமேரி புனர்தங் கரும்பிவைபுனர்பூசமாகும் என்று கூறுவதாயிற்று. தகுதியாவது, செத்ததாரைத் துஞ்சினாரென வழங்குவது போல்வது. மணி வரை, நீலமணிபோலும் மலை; அஃதாவது நீலமலை. இப்பகுதி தேவி குளம் என்னும் இடத்தைச் சார்ந்தது. --- 230. அதியமான் எழினி தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்துவந்த அதியமான்களுள் எழினி பெயன்பான் ஒருவன். இவன் காலத்தே சேரநாட்டைச் சேரமான் பெருஞ்சேர லிரும்பொறை ஆண்டு வந்தான். சேரமானுக்கும் அதியமானுக்கும் எவ்வகையாலோ பகைமையுண்டாயிற்று. அது வாயிலாக இருவர்க்கும் போருண்டாயிற்று.சேரமான் பெரும் படையுடன் வந்து தகடூரைச் சூழ்ந்துகொன்டான். தகடூர்ப் போரில் எழினி பேராற்றலுடன் பொருது வீழ்ந்தான். பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிச் சிறப்பித்த சான்றோராகிய அரிசில்கிழார்எழினியின் குணமாண்பையும் போர் வன்மையையும் நன்கறிந்திருந்தார். இப்போர் நிகழாவாறு அவர் செய்த முயற்சிவெற்றிதரவில்லை. ஆயினும், இருதிறத்தார்பாலும் அவர்க்கு மன வேறுபாடு தோன்றவில்லை. இருவர் நலங்களையும் எடுத்தோதிப் பாடிச் சிறப்பிப்பதில்அரிசில்கிழார் தவறினதில்லை. தகடூரில் பொருது வீழ்ந்த எழினியை இழந்த தகடூர் நாடுதாயையிழந்த குழவிபோல நெஞ்சு தடுமாறி வருந்துவது கண்டு அரிசில்கிழார் அவலமுற்று இப்பாட்டின்கண் வருந்திப் பாடுகின்றார். எழினியாது வீழ்ச்சிக்கு ஏதுவாகிய சேரமானை நோவாது, அவனுயிரையுண்ட கூற்றுவனையே இப்பாட்டில் நொந்து, கூற்றமே! வீழ்குடியுழவன் வித்தினையட்டுண்டதுபோல, பலவுயிர்களை உணவாகத் தரக்கூடிய போர் மறவனாக எழினி இருப்ப, அவனுயிரை யுண்டு நினக்கே கேடு சூழ்ந்து கொண்டாய் என இரங்கிக் கூறியுள்ளார். தகடூர் நாட்டில் அதியமான்களின் கோட்டையிருந்த வூர் இந்நாளில் அதமன் கோட்டை யென வழங்குகிறது. தகடூரும் இந்நாளில் தருமபுரி யென வழங்குகிறது.
இந்த எழினியின் வழிவந்தோர் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலும் தகடூர்ப் பகுதியில் இருந்தனரென்று தகடூர்க்கருகிலுள்ள ஒட்டப்பட்டிக் கல்வெட்டுக்கள் (A. R. No.211 of 1910) தெரிவிக்கின்றன. | கன்றம ராயங் கானத் தல்கவும் வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் களமலி குப்பை காப்பில வைகவும் விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல் | 5 | வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாட் | | பொய்யா வெழினி பொருதுகளஞ் சேர ஈன்றோ ணீத்த குழவி போலத் தன்னமர் சுற்றந் தலைத்தலை யினையக் கடும்பசி கலக்கிய விடும்பைகூர் நெஞ்சமொடு | 10 | நோயுழந்து வைகிய வுலகினு மிகநனி |
|