| | நீயிழந் தனையே யறனில் கூற்றம் வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான் வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங் கொருவ னாருயி ருண்ணா யாயின் | 15 | நேரார் பல்லுயிர் பருகி | | ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே. |
திணை: அது துறை: கையறுநிலை. அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடியது.
உரை: கன்றமராயம் கானத்து அல்கவும் - கன்றை மேவிய ஆனிரை மேய்ந்த காட்டிடத்தே பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும்; வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் - சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற காலினையுடைய வழிபோவார் தாம் வேண்டியவிடத்தே தங்கவும்; களமலி குப்பைகாப்பில வைகவும் -களத்தின்கண்நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும்; விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல் - எதிரில் நின்று தடுக்கும் பகையைத் துரந்த நிலங்கலங்காதசெவ்விய ஆட்சியினையும்; வையகம் புகழ்ந்த வயங்கு வினை - உலகத்தார் புகழ்ந்த விளங்கிய போரைச் செய்யும்; ஒள்வாள் பொய்யா எழினி பொருது களம் சேர - ஒள்ளிய வாளினையும் தப்பாதமொழியினையுமுடையஎழினி பொருது போர்க்களத்தின் கண்ணே வீழ; ஈன்றோள் நீத்த குழவி போல - பெற்ற தாயாற் கைவிடப்பட்ட உண்ணாத குழவியை யொப்ப; தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய - தன்னைமேவியகிளைஇடந்தோறும் இடந்தோறும் வருந்த; கடும்பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமோடு - மிக்க பசி வருத்திய கலக்கமுற்று துன்ப மிக்க நெஞ்சமோடு;நோய் உழந்து வைகிய உலகினும்-அவனை யிழந்துவருத்தமுற்றுக்கிடந்த உலகத்து விதனத்தினும்; மிக நனி நீ இழந்தனை - மிகப் பெரிதாக நீ இழந்தாய்; அறன் இல் கூற்றம் - அறமில்லாதகூற்றமே;வாழ்தலின் வரூஉம் - வாழ்தல் ஏதுவாக வரும்; வயல் வளன் அறியான் - வயலிடத்து விளையும் வருவாயை யறியானாய்; வீழ்குடி யுழவன் - தளர்ந்த குடியையுடைய உழவன்; வித்து உண்டாங்கு - விதையை யுண்டாற் போல; ஒருவன் ஆருயிர் உண்ணாயாயின் - இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரையுண்டிலை யாயின்; நேரார் பல்லுயிர் பருகிஆர்குவை - பகைவருடைய பல உயிரையும் பருகி நிறைவை; அவன் அமர் அடுகளத்து - அவன் போரில் பகைவரைக் கொல்லும் களத்தின்கண்; எ - று.
மன்: கழிவின்கண் வந்தது. உயிர் உண்ணவும் பருகவும் படுவதன். றாயினும் அவ்வாறு கூறுதல், அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல் |