| கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி (பெரும்பாண்.1-2) என்றாற்போல ஓர் அணிகுறித்து நின்றது.
எழினி, களஞ்சேர, ஒருவன் ஆருயிர் உண்ணாயாயின், அவன் அமரடு களத்துப் பல்லுயிரும் பருகியார்குவை; அது கழிந்ததேயெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
கடும்பசி துளங்கிய என்றும் பாடம்.
விளக்கம்: வம்பலர் வேண்டுபுலத் துறையவும் எனவும், களமலி குப்பை காப்பில் வைகவும் எனவும் கூறியதனால், அல்கவும் என்றதற்குப் பிறிதொன்றான் ஏதமின்றிக் கிடப்பவும் என்றுஉரைகூறப் பட்டது. பகைவராற் கலக்கமுண்டாகிய வழிச் செங்கோன்மையால் நிலத்து வாழும் வாழ்வு கலங்கிச் சீர்குலையு மென்பதுபற்றி, கலங்காச் செங்கோல் என்றதற்கு நிலங்கலங்காதசெவ்விய ஆட்சியெனவுரை கூறினார். செங்கோன்மை ஒன்றே கொண்டுபகைகடியுந்திறன்இல்வழி,வேந்தனதுநிலம் கலக்கமுறும் என்பதுபற்றி, விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல் என்றார். உட்பகை, புறப்பகை யென்ற இரண்டுமடங்க, விலங்கு பகை யெனல் வேண்டிற்று.ஒருவன்,தனக்குக்கூட்டாக வேறு எவரையும் வேண்டாதவன். ஒருவன் ஆருயிரை யுண்டொழிந்ததனால், நேரார் பல்லுயிர் பருகும் நற்றிறம்நினக்குஇல்லாதுகழிந்ததுஎன்பதுபட ஆர்குவைமன் என்றார். அணியாவது சமாதி யெனப்படுவது; சிவஞான முனிவர் இதனை விட்டும்விடாதஇலக்கணையென்பர். ஆர்தல், நிறைதலாதலின், பருகி ஆர்குவை யென்றதற்கு, பருகிநிறைவை என்று உரைத்தார். ஆருயிர், கொள்ளுதற்கரிய வுயிர் எனப் பொருள் கொள்ளப்படும். ---
231. அதியமான் நெடுமானஞ்சி தகடூரில் இருந்து நல்லாட்சிபுரிந்த அதியமான்களில் நெடுமான் அஞ்சி மிக்க புகழ் படைத்தவன். தன்னையுண்டாரை நெடிது வாழப் பண்ணும் நெல்லிக்கனியை ஒளவையார்க் களித்துப்பெருநலம் செய்தவன். இவன் முடிவில் சேரமானோடுபோருடற்றி உயிர் துறந்தான்.இவன்இறந்த காலத்தில் இவனுக்காக நெஞ்சு கலங்கிப் புலம்பியசான்றோர்களுள் ஒளவையார் தலைசிறந்தவர். அதியமான் இறந்தபின் அவனை ஈமத்திற்குக் கொண்டு எரிவாய்ப்பெய்துஇறுதிக் கடன்களை உரியவர். செய்து முடித்தனர். அங்கிருந்த சான்றோர் இதுகாறும் புகழ் மேம்பட்டு விளங்கிய அதியமான் மறைந்தான் என வருந்தினர்.அவரோடுஉடனிருந்த ஒளவையார், அதியமான் உடம்பு எரியிற் பட்டு வெந்து கரியினும், வேகாது நேரே விண்ணுலகு புகினும், அவன் பெற்ற புகழ்கள் ஒருகாலும் அழியா எனக் கையற்றுப் பாடினர். அப் பாட்டு இது. | எறிபுனக் குறவன் குறைய லன்ன கரிபுற விறகி னீம வொள்ளழற் குறுகினுங் குறுகுக குறுகாது சென்று விசும்புற நீளினு நீள்க பசுங்கதிர்த் |
|