பக்கம் எண் :

77

     

தைத்து உருவுமிடமாகிய போர்க்கள முழுதும்; தான் நிற்கும் மன் - தானே
சென்று நிற்பன் அது கழிந்தது; நரந்தம் நாறும் தன் கையால் - தான்
காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான், நரந்தப்பூ நாறும் தன்னுடைய
கையால்; புலவு நாறும் எம் தலை தை வரும் மன் - தான்
அருளுடைமையின் புலால் நாறும் எம்முடைய தலையைத் தடவுவன் அது
கழிந்தது; அருந்தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளைஉரீஇ - அரிய
தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண்
துளையையுருவி; இரப்போர் கையுளும் போகி - இரப்பவர் கை யுள்ளும்
தைத்துருவி; புரப்போர் புன்கண் பாவை சோர - தன்னாற் புரக்கப்படும்
சுற்றத்தாரது புல்லிய கண்ணிற் பாவை ஒளி மழுங்க; அம் சொல் நுண்
தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று- அழகிய சொல்லை யாராயும்
நுண்ணிய ஆராய்ச்சியையுடைய அறிவினையுடையோர் நாவின்கண்ணே
போய் வீழ்ந்தது; அவன் அருநிறத்து இயங்கிய வேல் - அவனது அரிய
மார்பத்தின்கண் தைத்த வேல்; ஆசாகு எந்தை - எமக்குப் பற்றாகிய எம்
மிறைவன்; யாண்டு உளன் கொல்லோ - எவ்விடத்துள்ளான் கொல்லோ;
இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை - பாடுவாரும்
இல்லை பாடுவார்க்கு ஒன்று ஈவாரும் இல்லை; பனிந்துறைப் பகன்றை
நறைக்கொள் மாமலர் - குளிர்ச்சியையுடைய நீரையுடைய துறையின்கண்
பகன்றையினது தேனைப் பொருந்திய பெரிய மலர்; சூடாது வைகி யாங்கு -
பிறராற்சூடப்படாது கழிந்தாற் போல; பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர்
தவப்பல - பிறர்க்கு ஒரு பொருளைக் கொடுக்காது மாய்ந்து போம் உயிர்
மிகப்பல; எ - று.


    அவன் நிறத்து உருவிய வேல் அவனுக்கு இறந்துபாட்டைச்
செய்தலோடே பாணர் முதலாயினார்க்கும் இறந்துபாட்டினைச் செய்தலான்,
ஒரு காலத்தே யாவரிடத்தும் தைத்தது என்றாராகக் கொள்க. மன்:
கழிவின்கண் வந்தது.

    விளக்கம்: “சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே என்புழி மன்னைச்
சொல் இனி அது கழிந்தது காண் என்னும் பொருள் குறித்து நின்றது; காண்
என்றால், பொருளுணராதானை, அரிதாகப்பெற்றகள்ளை எக்காலமும்
எமக்குத் தருகின்றவன் துறக்கத்துச் சேறலின் எமக்குக் கள்ளுண்டல்
போயிற்றென்றல் இதன் பொருள் எனத் தொடர்மொழி கூறிப்
பொருளுணர்த்துக” என்பர் (சொல். உரி. 94) நச்சினார்க்கினியர். அஞ்சொல்
நுண் தேர்ச்சிப் புலவர் என்றதற்குச் சொல்லழகும் பொருளழகு மென்ற
அழகமையச் சொல்லுதலும், பிறர் சொல்வனவற்றின்கண்ணும் நூலின்
கண்ணும் ஆழ்ந்து கிடக்கும் நுண் பொருளைத் தேர்தலுமுடைய புலவர்
என்று உரைத்தாலும் பொருள்நலம் குறையாதென வுணர்க. ஆசு,
பற்றுக்கோடு, பற்றாசு என்றாற்போல அவன் இறந்தது குறிந்து கையற்றுப்
பாடுதலால், “யாண்டுளன்கொல்லோ” என்றார். பகன்றை பலரும் சென்று