| முதுவா யொக்கற் பரிசில ரிரங்கக் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே | 15 | ஆங்கது நோயின் றாக வோங்குவரைப் | | புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த் தொற்றா தாகு மலிதிரைக் கடன்மண்டு புனலி னிழுமெனச் சென்று நனியுடைப் பரிசிற் றருகம் | 20 | எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே. |
திணையும் துறையு மவை. வெளிமானுழைச் சென்றார்க்கு அவன் துஞ்ச இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது.
உரை: நீடு வாழ்க என்று - நெடுங்காலம் வாழ்வாயாக என்று; யான் நெடுங்கடை குறுகி - யான் நெடிய வாயிலை யணுகி; பாடிநின்ற பசி நாட்கண் - பாடி நின்ற பசியையுடைய காலத்தின்கண்ணே; கோடைக் காலத்துக் கொழு நிழலாகி- கோடையான் வெம்மையுற்ற பொழுதின்கண் அடைந்தார்க்குக் கொழுவிய நிழலையொத்து; பொய்த்தல் அறியா உரவோன் - யார் கண்ணும் பொய் கூறுதலறியாத அறிவையுடையோனது; செவிமுதல் வித்திய பனுவல் - செவியிடத்து நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர்; நன்று விளைந்தன்று என - நன்றாக விளைந்ததென நினைத்து; நச்சியிருந்த நசை பழுதாக - பரிசிலை விரும்பியிருந்த அவ்விருப்பம் பயனில்லையாக; அட்ட குழிசி அழல் பயந்தாங்கு -அடப்பட்ட பானையினின்றும் சோறின்றி எரிபுறப்பட்டாற்போல; அளியர் - அளிக்கத்தக்கார்; ஆர்க என்னா அறனில் கூற்றம் - உண்பாராகவென்று கருதாத அறமில்லாத கூற்றம்; திறனின்று துணிய - கூறுபாடின்றாகி அவன் உயிரைக் கொள்ளத் துணிய; ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - முறையான் வெய்தாக மார்பின்கண் அறைந்து கொண்ட மகளிர்; வளை முறி வாழைப் பூவின் சிதற; முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்க - முதிய வாக்கினையுடைய சுற்றத்தோடு கூடிய பரிசிலர் இரங்க; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி யோங்கிய களர் நிலமாகிய பாழ்பட்ட புறங்காட்டின்கண்; வெள்வேல் விடலை சென்று மாய்ந் தனன் - வெளிய வேலையுடைய வீரன் போய் இறந்துபட்டான்;அது நோய் இன்றாக - கூற்றம் நோயின்றியிருப்பதாக; ஓங்கு வரை - உயர்ந்த மலையிடத்து; புலி பார்த்து ஒற்றிய - புலி பார்த்துவீழ்த்த; |