(இதுவுமது) ஊர் அறிந்த கௌவை உறாதோ-யானும் என் காதலியுமாகிய எங்கட்குக் கூட்டமுண்மை இவ்வூரார் அறிதலால் விளைந்த அலர் எனக்கு ஏற்ற தொன்றன்றே !; அதனைப் பெறாது பெற்ற அன்ன நீர்த்து-அதைக் கேட்ட நான், அக் கூட்டத்தை இன்று பெறாதிருந்தும், பெற்றாற்போல இன்புறுதற் கேதுவான தன்மையை அவ்வலர் உடைத்தாகலான். கௌவை நீர்த்து என இசையும். பரிமேலழகர் போல் மனமென்னும் வினைமுதலை வருவிக்கத் தேவையில்லை. 'உறா அதோ' 'பெறா அது' இசைநிறையளபெடைகள்.
|