பக்கம் எண் :

இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள
வுள்ளதூஉ மின்றிக் கெடும்.

 

இரவு உள்ள உள்ளம் உருகும்-செல்வமுண்மை யின்மையால் வேறுபட்டிருப்பினும், மாந்தப்பிறப்பினாலும் உடலுறுப்பமைதியினாலும் முற்றும் ஒத்திருக்கும் இருவருள், ஒருவன் இன்னொருவன்முன் சென்று நின்று.

"பல்லெலாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச்
சொல்லெல்லாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலாம் அகல வோட்டி மானமென் பதனை வீட்டி"


இரக்கும் நிலையின் கொடுமையை நினைந்தால் எம் உள்ளமெல்லாம் நீராய் உருகியோடும்; கரவுஉள்ளஉள்ளதும் இன்றிக் கெடும்-இனி,. இரக்கப்பட்டவன் அந்நிலையைக் கண்ணாரக் கண்டும் இல்லையென்று மறுத்தலின் கொடுமையை நினைந்தாலோ, அவ்வுருகு நிலைதானும் இல்லாது முற்றும் இறந்துபோம்.
இது சான்றோரான கண்டார் கூற்று.

"கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை-இரவினை
உள்ளுங்கா லுள்ள முருகுமா லென்கொலோ
கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு."

(நாலடி,305)

இரவு கொடிது; கரவு அதனினுங்கொடிது என்பதாம். உம்மை எச்சம். ’உள்ளதூஉம்’ இன்னிசை யளபெடை.