பக்கம் எண் :

மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்.

 

(இதுவுமது)

மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது-குவளைமலர் போலுங் கண்ணையுடையாளைப் பெறுதற் கருமையை அறியாது; இவ்வூர் எமக்கு அலர் ஈந்தது-இவ்வூரார் அவளை எளியளாக்கி என்னொடு தொடர்பு படுத்தும் அலரை எனக்கு அளித்துதவினர்.

'அருமை' அல்ல குறிப்பாட்டாலும் பல்வேறு இடையீடுகளாலும் தடைகளாலும் நேர்ந்தது. ஆருயிரளித்த பேருதவிபற்றி 'ஈந்தது' என்றான். 'ஊர்' வரையறுத்த ஆகுபெயர்.