பக்கம் எண் :

களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறு மினிது.

 

(இதுவுமது)

களித்தொறும் கள் உண்டல் வேட்ட அற்று-கட்குடியர்க்குக் கள்ளுண்டு வெறிக்குந்தோறும் அக் கள் விருப்பமாதல் போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது-காம வின் பர்க்கு அலர் பரவுந்தோறும் அக்காமாம் இனிதாகின்றது.

வேட்டற்று என்பது வேட்கப்பட்டற்று என்னும் செயப்பாட்டு வினைப் பொளுளது. 'ஆல்' அசை நிலை. காமமிகுதியால் அலரும் இன்பந்தருகின்றது என்பதாம்.