பக்கம் எண் :

காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்.

 

(தலைவியர் காமக்கடற்படார் ; படினும் அதனைத் தக்க புணையால் நீந்திக்கடப்பர் என்ற தோழிக்குச் சொல்லியது.)

காமக் கடல் உண்டே - காமக்கடல் எனக்கு இருக்கவே யிருக்கின்றது ; அது நீந்தும் ஏம்பபுணை இல் - ஆனால் அதை நீந்திக் கடக்கும் பாதுகாப்பான மரக்கலந்தான் எனக்கில்லை.

தூதுவிடுத்து எனக்குத் துணையாதற் குரிய நீயும் ஆனாயல்லை யென்பதாம். மன் , உம் ஈரிடத்தும் அசைநிலை. இனி, மிகுதிப் பொருள எனினுமாம். இதில் வந்துளது உருவகவணி .