பக்கம் எண் :

அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென்
மேனிமே லூரும் பசப்பு.

 

(ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.)

(யான் ஆற்றியிருக்கவும்) பசப்பு- இப்பசலைதான்; தந்தார் அவர் என்னும் தகையால்- என்னை யுருவாக்கினவர் அவர் (காதலர்) என்னும் பெருமிதத்தால்; என் மேனிமேல் இவர் தந்து ஊரும்-என் உடம்பின்மேல் ஏறி என்னைச் செலுத்துகின்றது.

இப்பசலை தன்னை என் தலைவர் தோற்றுவித்தார் என்னும் உரிமை பற்றி என்மீது ஊர்கின்றது. இதற்கு நீ கவல வேண்டேன் என்பதாம. ஊர்தல், பசலை படர்தல்.இப்படர்ச்சி குதிரையேற்றம் போற் கூறப்பட்டிருப்பது குறிப்புருவகம்.