(இதுவுமது) நனவு என ஒன்று இல்லையாயின் - நனவென்று சொல்லப்படுகின்ற ஒரு காலவேறுபாடு இல்லையாயின்; கனவினாற் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடுங் காதலர் என்னைவிட்டு ஒருபோதும் பிரியார். இடைவிடாது கனவு காணலாமாதலின் 'நீங்கார்' என்றாள். 'ஒன்று' என்பது வேறுபாடு விளக்கி நின்றது. 'மன்' அந்நிலைமையில்லை யென்பதுபட நிற்றலின் ஒழியிசை.
|