(இதுவுமது) இவ்வூரவர் நனவினால் நந்நீத்தார் என்பர் - இவ்வூர் மகளிர் நனவின்கண் நம் காதலர் நம்மைக் கைவிட்டாரென்று கொடுமை கூறுவர்; கனவினாற் காணார் - ஆனால், அவர் கனவின் கண் தப்பாது வருதலை என்போலக் கண்டறியார். தன்னொடு தோழிக்குப் பிறசெய்திகளிற் கருத்து வேற்றுமை யின்றேனும், அவள் தலைமகனைப் பழித்தலைச் சற்றும் பொறாளாதலின், 'இவ்வூரவர்' என அயன்மைப்படுத்திக் கூறினாள். 'கொல்' அசைநிலை. மூன்றனுருபுகள் முற்கூறியனவே.
|