| (இதுவுமது) (இதற்கு முன்பு நானே மதிமயங்கி நோய்த்துன் புற்றேன்.) மதி மருண்டு மாலை படர் தரும் போழ்து- இன்று, கண்டாரெல்லாரும் மதிமயங்கும் வகை மாலை வரும் பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும்- இந்நகர் முழுதும் மயங்கி நோய்த் துன்புறும். மதி மருள என்பது ' மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. பதி முழுதும் துன்புறுவதால் யான் இறந்து படுவேன் என்பதாம். மாலை மயங்கி வரும் போழ்து என் பதி நிலை கலங்கி நோயுழக்கும் என்று ரைப்பார் மணக்குடவ பரிப்பெருமாளர்.
|