(இதுவுமது) மாயா என் உயிர்- இதுவரை காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடா திருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும்- இன்று பொருளியல்பையே தமக்கு இயல்பாக வுடையவரை நினைந்து இம் மயங்கும் மாலைப் பொழுதில் இறந்து படுவதாகும். குறித்த பருவங் கடந்தும் பொருண் முடிவு கருதி வராமையின், சொன்ன சொல்லை நிறைவேற்றுந் தம்மியல் பொழிந்து பொருளியல் பையே தம்மியல்பாகக் கொண்டவரை நினைந்து இனியாற்றிப் பயனில்லை. ஆதலால், இனி நீ ஒன்றுஞ் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம்.
|