நீர்மை உடையார் பயன் இல சொலின் - இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் -அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கிவிடும்.
'சொலின்' என்னும் நிலைப்பாட்டு வினையெச்சம் சொல்லாமையை உணர்த்திற்று.