களவு அல்ல மற்றைய தேற்றாதவர்-களவல்லாத பிறவற்றை அறியாதவர்; அளவு அல்ல செய்து ஆங்கே வீவர்- வரம்பு கடந்த செயல்களைச் செய்து அப்பொழுதே அழிவர் . வரம்பு கடந்த செயல்கள் பெருங் களவுகள். அப்பொழுதே அழிதல், கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அரசனாலும் மக்களாலும் தண்டனை யடைதலும் எரியுலகில் வீழ்தலும். தேற்றாதவர் என்பது தன்வினைப் பொருளில் வந்த பிறவினைச்சொல். |