பக்கம் எண் :

பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும்

 

பொய்யாமை அன்ன புகழில்லை- இம்மையில் ஒருவனுக்கு பொய்சொல்லாமை போன்ற புகழ்க் கரணகம் (காரணம்) வேறில்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் - உடம்பு வருந்தி எதுவுஞ் செய்யாமலே அது அவனுக்கு மறுமைக்கு வேண்டிய எல்லா அறங்களையுந் தரும்.

இல்லறத்திற் பொருளீட்டுதற்கும் துறவறத்தில் தவஞ் செய்தற்கும் உடம்பை வருத்தும் முயற்சி இன்றியமையாததாகும். அம் முயற்சி யின்றியே அவ்விருவினைப் பயனையுந் தருதலால் , "எய்யாமை யெல்லா வறமுந் தரும்" என்றார். 'புகழ்' ஆகு பெயர். எய்த்தல் உடம்பு வருந்தியிளைத்தல்.